என்னது ஃபகத் ஃபாசில்லுக்கு பதிலாக பாலகிருஷ்ணாவா..? போச்சுடா..!

மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரும் வரவேற்பை பெற்ற ஆவேசம் படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

ஃபகத் ஃபாசில் முன்னணி கேரக்டரில் நடித்துள்ள ஆவேசம் என்ற படம் கடந்த ஏப்ரல் மாதம் 11-ம் தேதி வெளியானது. இந்த படத்தை ஃபகத் ஃபாசிலும் அவரது மனைவி நஸ்ரியாவும் இணைந்து தயாரித்திருந்தனர்.

இந்த படத்தில் மிதுன், ஜெய்சங்கர் உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர். ஜித்து மாதவன் இந்த படத்தை இயக்கியிருந்தார்.

காமெடி + கேங்ஸ்டர் ஜானரில் இந்த படம் வெளிவந்து தென்னிந்திய மொழிகளில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது.

குறிப்பாக இந்த படத்தில் இடம்பெற்ற இல்லுமினாட்டி என்ற பாடல் இணையத்தில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் ஆவேசம் படத்தை தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் ரீமேக் செய்வதற்கு பட தயாரிப்பு நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன.

ஆவேசம் படத்தில் ஃபகத் ஃபாசில் நடித்த ரங்கண்ணா என்ற கேரக்டர் நல்ல வரவேற்பை பெற்றது.

தெலுங்கு பட ரீமேக்கில் ரங்கண்ணா கேரக்டரில் நந்தமுரி பாலகிருஷ்ணா ஹீரோவாக நடிப்பார் என தகவல்கள் வெளிவந்துள்ளன.

இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆவேசம் திரைப்படம் உலக அளவில் 150 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்தது என்பது கவனிக்கத்தக்கது.