கமல் இடத்தைப் பிடித்து விட்டாரா விஜய் சேதுபதி..?

தமிழ் சினிமாவின் கலை மகன் கமல் ஹாசன் வெள்ளித்திரையில் எத்தனையோ சாதனைகளை படைத்திருந்தாலும் அவரை இன்றைய தலைமுறை குட்டீஸ் ரசிகர்கள் வரை கொண்டு சென்றது பிக் பாஸ் நிகழ்ச்சி தான்.

விஜய் தொலைக்காட்சியில் வருடம் ஒருமுறை 100 நாட்கள் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் வார இறுதி நாட்களில் நடுவராக பங்கேற்று அனைவரையும் கவர்ந்திருந்தார் கமல் ஹாசன்.

வார இறுதியில் கமல் வரும் அந்த இரண்டு எபிசோடுகளை பார்ப்பதற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் ஆர்வம் உருவாகும். வாரம் முழுவதும் நடந்ததை கமல் அவருடைய பார்வையில் விமர்சிக்கும் விதம் எல்லோரையும் கவர்ந்ததால் இந்த நிகழ்ச்சி தமிழகத்தில் தாறுமாறாக ஹிட்டானது. இதன் விளைவாக 7 சீசனாக கமலே நடுவராக பங்கேற்று இந்த நிகழ்ச்சி சக்கைப்போடு போட்டது.

இந்த நிலையில் திடீரென தற்போது பிக் பாஸில் இருந்து விடை பெறுவதாக கமல்ஹாசன் அறிவித்துள்ளார். ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்களின் வேலைப்பளு காரணமாக வரவிருக்கும் பிக் பாஸ் சீசனில் இருந்து குட்டி பிரேக் எடுத்துக்கொள்ள போவதாகவும் அவர் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து சீசன் 7-ல் புது பிக் பாஸ் யார் என்பது குறித்து தெரிந்து கொள்ள ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்து வருகிறது.

அந்த வகையில் நமக்கு கிடைத்த தகவலின்படி மக்கள் செல்வன் விஜய் சேதுபதி புது பிக் பாஸாக இந்த சீசனில் என்ட்ரி கொடுப்பார் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக அவரிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று முடிந்திருப்பதாகவும் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரலாம் என்றும் சொல்லப்படுகிறது. தமிழில் தொடங்கி இன்று பேன் இந்தியா ஸ்டாராக வளர்ந்திருக்கும் விஜய் சேதுபதி பிக் பாஸ் ரோலுக்கு பொருந்துவாரா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.