வாஸ்கோடகாமா திரைவிமர்சனம்

நடிகர் k.s. ரவிக்குமார், ஆனந்தராஜ், முனீஸ் காந்த், நகுல் , அர்த்தனா பினு, வம்சி கிருஷ்ணா நடித்திருக்கும் படம்.

கலியுக காலத்தில், நல்லவர்களைப் பற்றிய அங்கீகாரம் குறைந்து கெட்டவர்களுக்காக மிகப் பெரிய அங்கீகாரம் கொடுக்கும் காலத்தில், ஒருவன் மட்டுமே நல்லது நினைத்தால், அவன் என்ன ஆவான் என்பது தான் இந்த படத்தின் கதை கரு.

மிகவும் வித்தியாசமாக எடுக்கிறேன் என்ற பெயரில் தப்பாக எடுத்திருக்கிறார்கள்.

நகுல், ஆனந்தராஜ், அர்த்தனாபினு, கே எஸ் ரவிக்குமார் என்று ஆளாளுக்கு போட்டி போட்டு நடித்திருந்தாலும், தப்பான கதை என்பதால் படம் ஜொலிக்காமலே போய்விட்டது என்று தான் கூற வேண்டும்.

இந்தப் படத்தின் இயக்குனர், சமீபத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது, இது எல்லாருக்கும்மான கதை அல்ல என்று கூறி இருக்கிறார்.

அப்படி என்றால் இது யாருக்கான கதை என்பதை படம் வெளியிடுவதற்கு முன்பே அதை கூறி இருக்க வேண்டும் அல்லது போஸ்டரில்லாவது அறிவித்திருக்க வேண்டும். இரண்டும் பண்ணாமல் படத்தினை வெளியிட்டு இருப்பது அவரது குற்றமே.

அதுமட்டுமில்லாமல் இது மிக நீண்ட வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட படம். பல நாள் கிடப்பில் இருந்து இன்று வெளியிடப்பட்டிருக்கிறது.

ஆக மொத்தத்தில் வாஸ்கோடகாமா, வாஸ் அவுட் ஆன படம்.