சீரியலில் நடிக்கிறாரா ஆக்ஷன் கிங் அர்ஜுன்..?

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பவர் ஆக்ஷன் கிங் அர்ஜுன். அர்ஜுன் தற்போது சின்னத்திரையில் சீரியல் பக்கம் கால் வைக்க இருப்பதாக ஆச்சரிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

 

90களில் இருந்து தமிழ் சினிமாவில் ஹிட் படங்கள் நடித்து பிரபலமடைந்தவர் ஆக்சன் கிங் அர்ஜூன். டூப் போட்டு சண்டை போடும் ஹீரோக்களுக்கு மத்தியில் ஒரிஜினல் சண்டை காட்சிகளை சினிமாவில் கொண்டு வந்த புகழ் அர்ஜுனையை சேரும்.

 

ஹீரோவாக நடித்து வந்த அர்ஜுன் நாட்டுப்பற்று படங்களில் நடித்து மிகவும் பிரபலம் அடைந்தவர். ஆனால் சமீபத்திய காலங்களில் அவர் அதிக அளவில் வில்லன் ரோல்களில் நடித்து ஹிட்டடித்து வருகிறார். கடைசியாக விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்தில் ஆண்டனி தாஸ் கேரக்டரில் நடித்திருந்தார்.

 

தற்போது அஜித் நடிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்திலும் முக்கிய இடத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகர் அர்ஜுன் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தன்னுடைய தயாரிப்பு நிறுவனம் மூலம் ஒரு சீரியலை தயாரிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

 

ஏற்கனவே ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு சர்வைவர் என்ற நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கியிருந்தார் அர்ஜுன். அந்த நிகழ்ச்சி பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. அதில் போட்டியாளராக கலந்து கொண்ட உமாபதியை தன்னுடைய மூத்த மகள் ஐஸ்வர்யாவிற்கு சமீபத்தில் திருமணம் செய்து வைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அர்ஜுனின் சீரியல் குறித்த முக்கிய தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக சீரியல் நிர்வாகத்தால் வெளியிடப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.