தேவயானி மகளுக்கு ஷாருக்கான் உடன் நடிக்க ஆசையா..?

2000களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் நடிகை தேவயானி.

இந்திய திரைப்பட நடிகையான தேவயானி தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

தனது குழந்தைத் தனமான பேச்சாலும், தனித்துவமான நடிப்பாலும் ஒரு காலத்தில் ரசிகர்கள் பட்டாளத்தையே தனக்குள் வைத்தவர்.

இவர் நடித்த காதல் கோட்டை, சூர்ய வம்சம், ஃபிரண்ட்ஸ் உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.

திரைப்படங்கள் மட்டுமல்லாமல் சன் டிவியில் ஒளிபரப்பான கோலங்கள், முத்தாரம் போன்ற தொடர்களிலும் இவர் நடித்துள்ளார்.

தற்போது தொடர்களில் மட்டும் நடித்து வரும் தேவயானி எப்போது மீண்டும் சினிமாவுக்கு ரீஎன்ட்ரி கொடுப்பார் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இயக்குனர் ராஜகுமாரனை காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகை தேவயானிக்கு தற்போது இரண்டு மகள்கள் உள்ளனர். சமீபத்தில் தனது குடும்பத்துடன் நேர்காணல் ஒன்றில் பங்கேற்றார் நடிகை தேவயானி.

அப்போது பேசிய தேவயானி கூறுகையில், “எனது இரண்டாவது மகள் பிரியங்காவிற்கு ஒரு பிரபல நடிகரை மிகவும் பிடிக்கும், அவர் படம் ரிலீஸ் என்றாலே தோழிகளுடன் முதல் நாளே படத்திற்கு சென்று விடுவார். அவளுக்கு சாப்பாடு ஊட்டும்போது கூட அந்த நடிகரின் படத்தை போட்டு தான் ஊட்டிவிட்டிருக்கிறேன்.

என் மகளுக்கு மிகவும் பிடித்த அந்த நடிகர் பாலிவுட் ஸ்டார் ஷாருக்கான். எப்படியாவது ஒருபடத்தில் நடிகர் ஷாருக்கானுடன் நடித்துவிட வேண்டும் என்பது அவளின் ஆசை என்று கூறினார் தேவயானி.