தமிழ் சினிமாவே தற்போது எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் படம் ஜூலை 12ஆம் தேதி ரிலீசாகவுள்ள இந்தியன் 2 படம்தான்.
இந்த படத்தினை இயக்குநர் ஷங்கர் இயக்கியுள்ளார். இந்த படம் 1996ஆம் ஆண்டு வெளியான இந்தியன் படத்தினை முதல் பாகமாகக் கொண்டு அதன் நீட்சியாக எடுக்கப்பட்டுள்ளது. படத்தினை லைகா புரெடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. முதல் பாகத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ள நிலையில், இரண்டாவது பாகத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
படத்தில் இருந்து ஏற்கனவே பாரா மற்றும் கதறல்ஸ் என இரண்டு பாடல்கள் வெளியானது. இதில் பாரா பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றாலும் கதறல்ஸ் பாடல் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்நிலையில் நேற்று அதாவது ஜூன் 25ஆம் தேதி படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டது. படத்தின் ட்ரைலரில் கமல் பல்வேறு கெட்டப்புகளில் வருவதால் பலரையும் ட்ரைலர் ஈர்த்துள்ளது. மேலும் ட்ரைலரில் அனிருத்தின் இசை கவனிக்கும்படியாக இருந்ததால் படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
படத்தில் பல்வேறு கலைஞர்கள் நடித்திருந்தாலும், படத்தில் நடித்த நெடுமுடி வேணு, விவேக் மற்றும் மனோபாலா ஆகியோர் மறைந்து விட்டனர். இவர்கள் மூவரையும் சென்னையில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது கமல்ஹாசன் நினைவு கூர்ந்தார். படத்தில் மூவரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பதால், இவர்களது கதாபாத்திரங்கள் எவ்வாறு கையாளப்பட்டு இருக்கின்றன என்பதை படத்தின் ரிலீஸ்க்குப் பின்னர்தான் பார்க்க முடியும்.
இந்தியன் 2: இந்தியன் 2 படத்தில் கமல் ஹாசன், விவேக், மனோபாலா, நெடுமுடி வேணு, சித்தார்த், ப்ரியா பவானி ஷங்கர், எஸ்.ஜே. சூர்யா, காஜல் அகர்வால், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தின் புரோமோஷன் வேலைகள் சென்னை, மும்பை என இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகின்றது. இதுமட்டும் இல்லாமல் வெளிநாடுகளிலும் நடத்த படக்குழு திட்டமிட்டு அதற்கு ஏற்ற வகையில் ஏற்பாடுகளை செய்து வருகின்றனராம்.
Senapathy takes YouTube by storm! 🤞🏻🌪️ The #Indian2 🇮🇳 trailer has crossed 10M+ cumulative views. Soaring high with rave reviews. 🔥
▶️ https://t.co/pBf1FfzJsv@IndianTheMovie 🇮🇳 Ulaganayagan @ikamalhaasan @shankarshanmugh #Siddharth @anirudhofficial @dop_ravivarman… pic.twitter.com/z4xeLIceQC
— Lyca Productions (@LycaProductions) June 26, 2024
ட்ரைலருக்கு கிடைத்த வரவேற்பு: நேற்று ரிலீஸான இந்தியன் 2 ட்ரைலர் அனைத்து மொழிகளிலும் மொத்தம் 10 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து யூட்டிப் டிரெண்டிங்கில் முதல் இடத்தில் உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. தமிழில் மட்டும் இதுவரை கிட்டத்தட்ட 6 மில்லியன் பேர் பார்த்துள்ளனர். ட்ரைலர் ரிலீஸ் செய்யப்பட்டு 17 மணி நேரத்தில் இந்த சாதனையை இந்தியன் 2 ட்ரைலர் படைத்துள்ளது. இதுமட்டும் இல்லாமல் ட்ரைலரில் கமல்ஹாசன் பல்வேறு கெட்டப்புகளில் வருவதாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினைப் பெற்றுள்ளது. இதனை பலர் ஷங்கரின் தசாவதாரம் என கமெண்ட் செய்து வருகின்றனர்.
விமர்சனங்கள்: மேலும் ஒருசில வேடங்களில் உருவத்தைப் பார்த்தால் அது கமல் ஹாசனைப் போல் தெரியவில்லை எனவும் கமெண்ட் செய்து வருகின்றனர். ஆனால் படத்தின் டீசரைப் பார்த்து படத்தின் மீது எதிர்மறையான அபிப்ராயங்களைக் கொண்டவர்களே ட்ரைலரைப் பார்த்துவிட்டு அசந்துபோயுள்ளனர். இதனால் படக்குழு இந்தியன் 2 படத்தின் மீது மிகப்பெரிய நம்பிக்கையுடன் உள்ளது. இதுமட்டும் இல்லாமல் கமல்ஹாசன் நடிப்பில் நாளை வெளியாகவுள்ள கல்கி 2898 ஏ.டி படமும் உலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனால் கமல்ஹாசனும் அவரது வெறித்தனமான ரசிகர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.