இந்தியன் 2 அனைவரின் மனதிலும் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் – இயக்குனர் சங்கர்.

ஷங்கர் இயக்கத்தில் கமலஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது.

அதில் கலந்து கொண்ட இயக்குனர் ஷங்கர் பேசியதாவது, ” இந்தியன் 2 படத்தின் கதை என்பது, இன்றைய நாட்டு நடப்பு சூழ்நிலையில் இந்தியன் தாத்தா வந்தால் எப்படி இருக்கும் என்பது தான் படத்தின் கரு.

இந்தியன் முதல் பாகத்தை தமிழ்நாட்டில் மட்டும் தான் எடுத்து இருந்தோம். ஆனால் இந்தியன் 2 படத்தை தமிழ்நாட்டை தாண்டி வேறு சில வெளி மாநிலங்களிலும் எடுத்துள்ளோம். பல மாநிலங்களில் எடுத்துள்ளதால் இந்த படத்தில் நிறைய கதாப்பாத்திரங்களைக் காணலாம்.

இந்தியாவில் உள்ள அனைத்து மாநில மக்களும் குடும்பத்துடன் பார்க்கும் வண்ணம் தான் இந்தியன் 2 திரைப்படம் இருக்கும். இந்த படம் முடியும் போது கண்டிப்பாக படம் பார்க்கும் அனைவரையும் யோசிக்க வைக்கும்.

இரண்டாம் பாகமும் சிறப்பாக வந்ததற்கு முதல் காரணம் கமலஹாசன் தான். முதல் பாகத்தில் அவருக்கு 40 நாட்கள் தான் மேக்கப் போடப்பட்டது. ஆனால் இரண்டாம் பாகத்திற்கு 70 நாட்கள் மேக்கப், அதிலும் அவருக்கு மேக்கப் போட தினமும் 3 மணி நேரம் ஆகும். மேலும் அதை கலைக்க 1 மணி நேரம் ஆகும்.

அந்த சமயத்தில் எதுவும் சாப்பிட முடியாது. இந்த வயதிலும் அவரை பார்க்கும் போது எனக்கு பிரமிப்பாக இருக்கிறது” என்று ஷங்கர் பேசியுள்ளார்.