ரயில் திரைவிமர்சனம்

தேனி மாவட்டத்தில் ஒரு பஞ்சாலையில் சுனில் என்கிற வட இந்தியன் வேலை பார்க்கிறான். அவன் அந்த கிராமத்தைச் சேர்ந்த ஒரு வயதான மூதாட்டியின் வீட்டில் வாடகை எடுத்து தங்கி இருக்கிறான். அந்த வீட்டின் இன்னொரு பகுதியில் செல்லம்மாவும் அவனது கணவரும் வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில் செல்லம்மாவின் கணவர் பொழுதும் குடித்துக் கொண்டு எந்த வேலைக்கும் செல்லாமல் சுற்றித் திரிகிறார். வட மாநிலத்திலிருந்து வந்து நமது பிழைப்பை கெடுத்து விட்டானே என்று சுனில் மீது கோபப்படுகிறார். ஆனால் சுனிலும் செல்லமாகவும் ரொம்ப பாசமாக பழகுகிறார்கள். இது ஒரு கட்டத்தில் அவனுக்குள் ஒரு பொறாமையை தருகிறது. இதனால் அவனை கொலை செய்ய முடிவு எடுக்கிறான். அப்பொழுது என்ன ஆனது என்பதை கதைக்கரு..

பிழைப்பு தேடி வந்தவர்களின் வாழ்க்கையை எதார்த்தமாக கூற வேண்டும் என்று முயற்சித்து இருக்கிறார் இயக்குனர் பாஸ்கர் சக்தி வாழ்த்துக்கள்.

ஆனால் திரைக்கதையை கவனம் செலுத்தி இருக்கலாம் படத்தில் முதல் பாதி மிகவும் ஜவ்வாகவே இழுக்குறது.

இரண்டாம் பாதி மட்டுமே கதையில் விறுவிறுப்பை கூட்டுகிறது.

செல்லம்மாவின் கணவராக வருபவர் நடிகர் குரு சோமசுந்தரத்தை போல் காட்சியளிக்கிறார். இயக்குனர் அவரை தேர்ந்தெடுத்து விட்டு அதுக்கப்புறம் மாற்றி விட்டாரா என்பதுதான் தெரியவில்லை. படத்தில் செல்லம்மாவாக வரும் நடிகை வைரமாலா நடிப்பில் பின்னி பெடல் எடுத்திருக்கிறார். நிச்சயம் அவர் ஒரு ரவுண்டு வருவார். அது மட்டும் இல்லாமல் படத்தில் காமெடியனாக வருபவர், துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் வரும் டவுசர் பாண்டி போல் இருக்கிறார். நன்றாகவும் காமெடி பண்ணுகிறார். நடிகர்கள் யாரும் புதுமுக நடிகர்கள் என்ற சூடே தெரியாமல் வேலை வாங்கி இருக்கிறார் பாஸ்கர் சக்தி.

தேனி ஈஸ்வரியின் ஒளிப்பதிவு, இயற்கை ஒளியின் மூலம் மிக அழகாக படம் பிடித்திருக்கிறார்.

ஆங்காங்கே சில பல லாஜிக் ஓட்டைகள் இருந்தாலும், ரயில் படத்தை ஒரு தடவை பார்க்கலாம். ஆனால் இது கமர்சியல் படம் அல்ல.