அர்ஜுனின் மூத்த மகள் ஐஸ்வர்யாவும், தம்பி ராமையாவின் மகன் உமாபதியும் கடந்த சில வருடங்களாக காதலித்துவந்தார்கள்.
அவர்களது திருமணத்துக்கு இரண்டு வீட்டார்களும் சம்மதம் தந்ததையடுத்து இருவரும் கடந்த 10ஆம் தேதி திருமணம் செய்துகொண்டனர். திருமணம் சிம்ப்பிளாக நடந்தாலும் அவர்களது திருமண வரவேற்பு பிரமாண்டமாக நடந்தது. அதில் ரஜினிகாந்த் உள்ளிட்ட திரை பிரபலங்கள் கலந்துகொண்டனர். இந்தச் சூழலில் அர்ஜுன் கொடுத்த வரதட்சணை குறித்து பத்திரிகையாளர் செய்யாறு பாலு பேசியிருக்கிறார்.

இந்நிலையில் பத்திரிகையாளர் செய்யாறு பாலு இந்த விவகாரம் குறித்து அளித்த பேட்டியில், “சென்னை போரூரில் அர்ஜுனுக்கென்று நிறைய இடங்கள் இருக்கின்றன. ஏன் ஒரு கிராமத்தையே அவர் வைத்திருக்கிறார். தனி அப்பார்ட்மெண்ட் எல்லாம் அவரது சொத்தாக இருக்கிறது.

அர்ஜுன் 500 கோடி ரூபாய், 1000 கோடி ரூபாய் வரதட்சணை கொடுத்ததாக சமூக வலைதளங்களில் சொல்கிறார்கள். மேலும் 1000 வகையான சாப்பாடு இருந்தது என்றெல்லாம் சொல்கிறார்கள். ஆனால் அதெல்லாம் சும்மா. இணையத்தில் வரக்கூடிய தகவல். அர்ஜுனுக்கு ஆண் வாரிசு இல்லை. எனவே அவர் வைத்திருக்கும் சொத்துக்கள் எல்லாமே அவரது இரண்டு மகள்களுக்குத்தான்” என்றார்.
இதனைப் பார்த்த ரசிகர்கள், சொத்துக்கள் மகள்களுக்கு என்றால்; ஐஸ்வர்யாவுக்கு தனது பாதி சொத்தை வரதட்சணையாக கொடுத்துவிட்டாரோ என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.