எலன் மஸ்கே பகிர்ந்த தப்பாட்டம் பட போஸ்டர்

எக்ஸ் தளம், டெஸ்லா நிறுவனங்களின் அதிபர் எலான் மஸ்க் தனது எக்ஸ் தளத்தில் தமிழ்ப் படமான ‘தப்பாட்டம்’ படத்தின் காட்சி ஒன்றின் மூலம் உருவாக்கப்பட்ட மீம்ஸ் ஒன்றைப் பகிர்ந்து இருந்தார்.

தனது படத்தின் போஸ்டரை பகிர்ந்து உலகம் முழுவதும் என்னை கொண்டு சென்ற எலான் மஸ்குக்கு நன்றி என ‘தப்பாட்டம் படத்தின் நடிகர் துரை சுதாகர் தெரிவித்துள்ளார்.

எலான் மஸ்க்: இரு பெரிய நிறுவனங்களான ஆப்பிள் , ஓபன் ஏஐ நிறுவனங்களை எலான் மஸ்க் சீண்டி இருக்கிறார். உலக அளவில் மிகப் பிரபலமாக இருக்கும் ஆப்பிள் நிறுவனம், தங்களது மேக்புக், ஐபோன், ஐபாட் உள்ளிட்ட சாதனங்களில் ஓபன் ஏஐ டூல்களை இனி பயன்படுத்தலாம் என ஆப்பிள் சிஇஓ டிம் குக் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். அதனை கண்டித்து ரீட்வீட் செய்த எலான் மஸ்க், ஐபோன், ஆப்பிள், டேட்டா ஆகியவற்றை மையமாக வைத்து யாரோ ஒருவர் உருவாக்கிய மீம்ஸ் ஒன்றை இன்று எலான் மஸ்க் பகிர்ந்துள்ளார்.

தப்பாட்டம்: ஒரு இளநீரை படத்தின் நாயகி ஸ்டிரா வைத்து குடிக்க, அந்த நாயகியின் வாயிலிருந்து ஒரு ஸ்டிராவை வைத்து நாயகன் குடிக்கும் ஒரு காட்சி அது. 2017ம் ஆண்டு முஜிபூர் ரஹ்மான் இயக்கத்தில் துரை சுதாகர், டோனா ரொசாலியோ நடித்த படமான ‘தப்பாட்டம்’ படத்தின் அந்த ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பல மீம்ஸ்களாக பல முறை பரவியிருக்கிறது.

இதுகுறித்து அப்படத்தில் நடித்த துரை சுதாகர் நான் ‘களவாணி 2’ படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். எலான் மஸ்க் இன்று தனது எக்ஸ் பக்கத்தில் நான் நடித்த ‘தப்பாட்டம்’படத்தின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இது உலக நாடுகள் முழுவதும் பரவி, அங்கிருக்கும் தமிழ் மக்கள் இந்த மகிழ்ச்சியை நம்முடன் பகிர்ந்துள்ளார்கள்.