நீங்க ஒரு இனிமையான மனிதர் சிம்பு..!

கோமாளி மற்றும் லவ் டுடே படங்களை இயக்கிய பிரதீப் ரங்கநாதன் தற்போது பிஸியான நடிகராகவே மாறிவிட்டார்.

இவர் ஏற்கனவே இயக்குநர் விக்னேஷ் சிவனின் இயக்கத்தில் எல்.ஐ.சி படத்தில் நடித்து வரும் நிலையில், ஓ மை கடவுளே படத்தின் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் படத்திலும் நடித்து வருகின்றார்.

டிராகன் படம்: படத்தின் முதற்கட்ட படபிடிப்பு முடிவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இம்மாதத்தில் தொடங்கவுள்ளது. இது சென்னை மற்றும் ஹைதராபாத் ஆகிய இடங்களில் படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்த படத்தினை ஏ.ஜி.எஸ் எண்டர்டைமெண்ட் தயாரித்து வருகின்றது. இந்தப் படம் குறித்த அறிவிப்பு வந்தவுடன், கோலிவுட் வட்டாரத்தில் இந்த படத்தின் கதை முதலில் சிம்புவுக்கு சொல்லப்பட்டது. அதன் பின்னர் பிரதீப் ரங்கநாதன் இந்த படத்திற்குள் வந்துள்ளார் என பேச்சுகள் எழுந்தது. ஆனால் இதனை முற்றிலும் மறுத்த டிராகன் படத்தின் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து, “நான் சிம்பு சாருக்குச் சென்ன கதை வேறு. டிராகன் படத்தின் கதை முழுக்க முழுக்க சென்னையை மைய்யப்படுத்தி பிரதீப் ரங்கநாதனை மனதில் வைத்து எழுதப்பட்ட கதை” எனக் கூறி மறுத்துவிட்டார்.

அஸ்வத் மாரிமுத்துவின் பிறந்தநாள்: இந்நிலையில் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இன்று பிறந்த நாளைக் கொண்டாடுகின்றார். இந்நிலையில் நடிகர் சிம்பு, இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து மற்றும் அவரது உதவியாளர்களுக்கு பிரியாணி அனுப்பி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இதனை இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து தனது எக்ஸ் பக்கத்தில் தனது உதவியாளர்களுடன் பிரியாணி சாப்பிடும் புகைப்படத்தை பகிர்ந்து, எனது பிறந்த நாளுக்கு, எனக்கும் எனது குழுவினருக்கும் நீங்கள் பிரியாணி அனுப்பியதற்காக நன்றிகள் சிம்பு சார். நீங்க ரொம்ப நல்ல மனிதர்” என பதிவிட்டுள்ளார்.