மலையாளக் கரையோரம் ஒதுங்கும் கௌதம்மேனன்

கோலிவுட்டின் ஸ்டைலிஷ் இயக்குநர் என்று பெயர் எடுத்தவர் கௌதம் மேனன். சிம்ப்பிள் லைனை வைத்துக்கொண்டு தன்னுடைய மேக்கிங் மூலம் அதகளம் செய்பவர் அவர்.

இடையில் சில காரணங்களால் இயக்கத்திலிருந்து ஒதுங்கியிருக்கிறார். தற்போது அவர் ஜோஷ்வா இமைபோல் காக்க என்ற படத்தை இயக்கியிருக்கிறார். அதுவும், துருவ நட்சத்திரமும் விரைவில் ரிலீஸாகவிருக்கின்றன. இந்தச் சூழலில் கௌதம் மேனன் மலையாளத்தில் படம் இயக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

அதன்படி அவர் மலையாளத்தில் மம்மூட்டி மற்றும் நயன்தாராவை வைத்து படம் இயக்கவிருப்பதாகவும் அந்தப் படத்தை மம்மூட்டியே தயாரிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள், துருவ நட்சத்திரம் கொடுத்த அடிதான் கௌதம் மேனனை மலையாளம் பக்கம் ஒதுங்க செய்திருக்கிறதோ என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.