புஜ்ஜி @ அனுப்பட்டி திரை விமர்சனம்..!

ஒரு கிராமத்தில் துர்கா என்ற இளம் பெண் கைவிடப்பட்ட ஒரு ஆட்டுக்குட்டியுடன் அழகான பிணைப்பை உருவாக்குகிறாள். அதற்கு புஜ்ஜி என்று பெயரிடுகிறாள். புஜ்ஜியை அவளது குடிகாரத் தந்தை விற்கும்போது அதை மீட்கும் பணியில் அவளும், அவளுடைய சகோதரரும், அவர்களது தோழியாக வரும் தர்ஷனியும் ஒரு பயணத்தை மேற்கொள்கிறார்கள்.

வழிநெடுக பல்வேறுபட்ட மாந்தர்களை சந்திக்கிறார்கள். அவர்களின் எதார்த்தங்களையும் புரிந்து கொள்கிறார்கள். இறுதியில் அந்த புஜ்ஜி என்ற ஆட்டுக்குட்டியை மீட்டார்களா..? இல்லையா..? என்பதை படத்தின் கதை கரு.

இது முழுக்க முழுக்க குழந்தைகள் உலகம் சார்ந்து எடுக்கப்பட்ட படம். குழந்தைகளின் தேடல், அவர்கள் ஒரு பொருளின் மீது அன்பு வைப்பதால் ஏற்படும் உணர்ச்சிகள், ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுக்காத பாசம் என்று படம் முழுக்க உணர்ச்சிகளை கொட்டி தெளித்து இருக்கிறார்கள். படம் முழுதும் மனிதம் பற்றி பேசி இருக்கிறார்கள்.

ஒரு மிகக் குறைந்த பட்ஜெட்டில் சின்ன நேர்த்தியான கதையை சொல்ல முயற்சி இருக்கிறார்கள். படக்குழுவினருக்கு பாராட்டுக்கள்.

படத்தில் வரும் கதை மாந்தர்கள் ஒவ்வொருவரும் வட்டார வழக்கில் பின்னி எடுத்திருக்கிறார்கள்.

கதைக்காக இவ்வளவு நல்ல விஷயங்கள் இருந்தும் இந்த படம் ஜொலிக்காமல் போவதற்கு மிக முக்கியமான காரணம், படத்தின் மேஜிக்கை மட்டுமே நம்பி லாஜிக்கை கோட்டை விட்டது மட்டும்தான்.

எதார்த்தம் என்ற பெயரில் அபத்தமான சில காட்சிகளை வைத்திருக்கிறார்கள். பெட்ரோல் பங்கில் நோட்டீஸ் கொடுப்பது, பக்கத்து கிராமத்தில் பள்ளிக்குச் செல்லாத குழந்தைகளை தேடி கண்டுபிடிக்காமல் அப்படியே இருப்பது, குடிகார அப்பா சதா குடி போதையிலேயே இருப்பது மாதிரி காட்டிக் கொள்வது, இடைச்செருகளாக வந்த சரண்யா என்ற பின் அவளைப் பற்றிய பெரிய புரிதல் எதுவும் இல்லாமல் இருப்பது என்று படம் முழுக்க ஆங்காங்கே மிகப்பெரிய லாஜிக் ஓட்டைகள் உள்ளன.

இதை சரி செய்து இருந்தால் இந்த படம் வெற்றி வெற்றி பெறாவிட்டாலும், நல்ல படம் என்ற பெயர் எடுத்திருக்கும்.

ஆக மொத்தத்தில் புஜ்ஜி @ அனுப்பட்டி இன்னும் கொஞ்சம் தேறியிருக்கலாம்.