பிரபல லுலு மால்களின் தலைவரும், தொழிலதிபருமான எம்.ஏ.யூசுப் அலி முன்னிலையில் டிடிசி தலைவர் முகமது கலீஃபா அல் முபாரக் கோல்டன் விசாவை நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கி கெளரவித்தார். விசா கிடைத்ததும் ரஜினிகாந்த் கூறுகையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசிடம் இருந்து விசா அனுமதி கிடைத்ததில் பெருமை அடைகிறேன்.
விசா நடைமுறைகளை கையாண்ட லுலு குழுமத்தின் தலைவர் யூசுப் அலிக்கு அவர் நன்றி தெரிவித்தார். விசா கிடைத்தவுடன் ரஜினிகாந்த் தனது துபாய் பயணத்தின் போது BAPS இந்து மந்திர் மற்றும் அந்நாட்டின் மிகப்பெரிய மசூதியான அபுதாபியின் ஷேக் சயீத் கிராண்ட் மசூதி ஆகியவற்றை பார்வையிட்டார். ரஜினிகாந்த் கோல்டன் விசா வாங்கியது தொடர்பான புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
முன்னதாக நடிகர்கள் கமல்ஹாசன், நயன்தாரா, விஜய்சேதுபதி, அமலா பால், த்ரிஷா, துருவ் விக்ரம், மோகன்லால், மம்முட்டி, ஷாருக்கான், சல்மான் கான், ரன்வீர் சிங், துல்கர் சல்மான், சஞ்சய் தத், போனி கபூர் மற்றும் சுனில் ஷெட்டி ஆகியோருக்கு துபாய் அரசு கோல்டன் விசா வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ரஜினிகாந்த் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.