சமீபத்தில் வெளிவந்த அண்ணாத்த திரைப்படம் பிளாப் ஆனது நம் அனைவரும் அறிந்ததே. அதனால் அடுத்த கட்டமாக ஜெயிலர் படத்தில் மிகவும் கவனமாக ஒவ்வொரு விஷயங்களையும் பார்த்து நடித்து வருகிறார் ரஜினி.
ஜெயிலர் படத்தின் வெற்றிக்காக, மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ் குமார், ஹிந்தியில் ஜாக்கி ஷெராப் என பல பிரபலங்களை நடிக்க வைக்கிறது ஜெயிலர் படக்குழு.
மேலும், இவரின் சக போட்டியாளரும், நண்பருமான கமல், கடந்தாண்டு பெரிய வெற்றி படத்தை கொடுத்து ஒட்டுமொத்த திரையுலகையும் திரும்பி பார்க்க வைத்த நிலையில். அதே போல் மெகா பிளாக் பாஸ்டர் அடிக்க முடிவு செய்துள்ளார் ரஜினி.
அதனால் இப்பொழுது தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வரும் இயக்குனருக்கு வலை விரித்து இருக்கிறார். அந்த வலையில் சிக்கியதோ லோகேஷ் தான்.

பின்பு அவர்கள் சந்தித்தபோது லோகேஷிடம் தனக்கு ஒரு படத்தை பண்ணுமாறு வற்புறுத்தி இருக்கிறார் ரஜினி. மேலும் அதில் ஒரு கண்டிஷனையும் போட்டு வைத்திருக்கிறார்.
இதனை கேட்டதும் லோகேஷ் என்ன சொல்வது என்று தெரியாமல் குழம்பி இருக்கிறார். பின்னர் லியோ படத்திற்கு பிறகு கைதி 2 மற்றும் விக்ரம் 2 என வரிசையில் இருப்பதால் 3 ஆண்டுக்கு பிறகு படம் பண்ணலாம் என்றிருக்கிறார் லோகேஷ்.
மேலும் அந்தப் படங்களை சூட்டோடு சூட்டாக முடித்தால் தான் வெற்றி கிடைக்கும் என்றும் சொல்லி இருக்கிறார். அதே மாதிரி அந்த படத்திற்கான தயாரிப்பாளர்களிடம் வாக்குறுதி கொடுத்துள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார்.
இதனை கேட்ட ரஜினி, கமல் படத்தை பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். அது சம்பந்தமாக கமலிடம் நான் பேசிக் கொள்கிறேன் என்று கூறி இருக்கிறார்.

அது மட்டுமில்லாமல் விக்ரம் படத்தைப் போல நானும் ஒரு பெரிய வெற்றி படத்தை அடைய வேண்டும் என்று கண்டிஷனாக சொல்லி இருக்கிறாராம் ரஜினி. அத்துடன் நான் சினிமாவில் இருந்து விலகப் போகிறேன் என்றும் கூறியுள்ளார். ரஜினி இப்படி கூறியதன் மூலம் லோகேஷ்க்கு பெரிய செக் வைக்கப்பட்டதாக தெரிகிறது.
இதையெல்லாம் தாண்டி கமல், ரஜினிக்காக ஒத்துக் கொண்டாலும் லோகேஷின் அடுத்த படத்திற்கான தயாரிப்பாளர்கள் என்ன சொல்லப் போகிறார்கள் என்று தெரியவில்லை. ஏனென்றால் அந்த படத்தின் தயாரிப்பாளர்கள் ஏற்கனவே இதற்கான முடிவுகளை பேசி ஒப்பந்தம் செய்திருக்கிறார்.
திடீரென இப்பொழுது ரஜினி, லோகேஷிடம் படத்திற்காக இப்படி கெஞ்சுவது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கிறது.
அதுமட்டுமல்லாமல் 175 படங்கள் நடித்ததோடு, நடிப்பை நிறுத்தவுள்ளார் ரஜினி என்பது நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்த செய்தியாகும்.