கடந்த சில நாட்களுக்கு முன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகிவரும் “LEO” படத்தின் ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலானது.
மேலும், சில கடுமையான விமர்சனங்கள் பெற்றும் சிக்கித் தவித்தது. இப்படத்தில், சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலி கான், கவுதம் மேனன், பிரியா ஆனந்த், த்ரிஷா, மரியம் ஜார்ஜ் மற்றும் பலர் இப்படத்தில் நடித்து வருகின்றனர்.
தற்போது, இப்படத்தில் இருந்து த்ரிஷா விலகி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. காரணம், தளபதி 67 படத்தின் சம்பந்தப்பட்ட ட்வீட்களை த்ரிஷா டெலீட் செய்து விட்டதால் தான் இந்த சர்ச்சை கிளம்பியுள்ளது.
உண்மையாகவே த்ரிஷா விலகுவாரா? என்று கேட்டால். அவர் நிச்சயம் விளக மாட்டார். ஏனெனில், த்ரிஷா பதிவு செய்யும் ட்வீட்களை 2 அல்லது 3 நாட்களில் டெலீட் செய்வது வழக்கம் தான். அப்படி இருக்க இப்படத்தில் இருந்து அவர் நிச்சயம் விலக மாட்டார் என்பது உறுதி.
மேலும், தளபதி 67 படத்தின் பூஜையில் விஜய்யுடன் அவர் எடுத்துக்கொண்ட புகை படங்களை அவர் இன்னும் டெலீட் செய்யவில்லை என்பது கொடுத்தால் தகவல்.