ரஜினியின் வியாபாரத்தை நொறுக்க ஸ்கெட்ச் போட்டாரா லோகேஷ்?

ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஆகஸ்ட் 14 அன்று வெளியாகவுள்ள திரைப்படம் ‘கூலி’.

இப்படத்தில் ரஜினிகாந்துடன் நாகார்ஜுனா, ஷோபின் சாகீர், உபேந்திரா, ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், அமீர் கான் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க, கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்ய, பிலோமின் ராஜ் படத்தொகுப்பை கையாண்டுள்ளார்.

ரஜினிகாந்த் நடிப்புக்கென்று உலகம் முழுக்க ரசிகர்கள் பட்டாளம் உண்டு. அதிலும் குறிப்பாக ரஜினிகாந்துக்கு குழந்தைகளை மற்றும் இளைஞர்கள் ரசிகர்கள் அவருடைய ஆரம்பகாலத்திலிருந்து இருந்து வருகிறார்கள். ரஜினிகாந்த் திரைப்படங்கள், ஒரு சில படங்கள் தவிர்த்து மற்றவை பெரும்பாலும் வெற்றிப்படங்களாகவே இருந்துள்ளன.

இப்படிப்பட்டுள்ள சூழலில் தான் ரஜினிகாந்த் நடித்து லோகேஷ் கனகராஜ் இயக்கி தற்போது வெளியாகவுள்ள ‘கூலி’ படத்திற்கு தணிக்கை துறை(CBFC) ‘A’ சான்றிதழ் வழங்கியுள்ளது. ஒரு திரைப்படத்திற்கு ‘A’ சான்று வழங்கப்பட்டால், 18 வயதை நிரம்பியவர்கள் மட்டும் தான் அப்படத்தை பார்க்க திரையரங்குகள் நுழைய அனுமதிப்பார்கள். இச்சூழலில், ‘கூலி’ திரைப்படத்திற்கு தணிக்கை துறையினரால் ‘A’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதால், இப்படத்திற்கு ரஜினிகாந்த் ரசிகர்களின் பலமான குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் திரைப்படத்தை காண திரையரங்கதிற்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பது வருத்தத்திற்குரியது.

‘கூலி’ திரைப்படத்தின் இயக்குநரான லோகேஷ் கனகராஜ், நடிகர் மற்றும் ‘தமிழக வெற்றி கழகம்’ கட்சியின் தலைவரான விஜய்க்கு ‘மாஸ்டர்’ மற்றும் ‘லியோ’ என்ற இரண்டு திரைப்படங்களை இயக்கி விஜய்க்கு வெற்றிக்கனியை கொடுத்து விஜய்க்கு மிகவும் நெருங்கிய நண்பரானார் லோகேஷ் கனகராஜ்.

இதுவரை ரஜினிகாந்த் படத்தை ரசித்த சிறுவர்களுக்கு லோகேஷ் கனகராஜின் ‘கூலி’, ‘A’ சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளதால் பெரும் ஏமாற்றத்தை கொடுக்க உள்ளது என்பதைவிட, ரஜினியின் வியாபாரத்தை குறைக்க வழி செய்துள்ளது என்பது தான் நிதர்சனம்.