இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சிவராஜ்குமாரைக் குறிப்பிட்டு தமிழிலிருந்து வந்தது அவரது மொழி என்று பேசியிருந்தார். இது கர்நாடகாவில் பெரும் எதிர்ப்புகளை சந்தித்து வருகிறது. நடிகர் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்காத நிலையில் கன்னட அமைப்பினர் தக் லைஃப் படம் வெளியானால் திரையரங்குகளில் தாக்குதல் நடத்துவோம் என எச்சரிக்கை விடுத்திருக்கின்றன. மேலும் கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தக் லைஃப் படத்தில் கர்நாடகாவில் வெளியிட தடைவிதித்திருந்தது. இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசன் கர்நாடகாவில் தக் லைஃப் படத்தின் மீதான தடையை நீக்க கோரி கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் தெரிவித்துள்ளதாவது, நாம் அண்டை மாநிலத்தவர்கள், நாம் இருவரும் ஒன்றாக வேலை செய்கிறோம். வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இங்குள்ள தண்ணீர் தமிழகத்திற்கு செல்கிறது, அங்குள்ள மக்கள் இங்கு வந்து வசிக்கிறார்கள். நாம் எதிரிகளில்லை. நண்பர்கள். மொழி விவகாரத்தின் பின்னால் இருக்கும் வரலாறு குறித்து எனக்கு தெரியாது. அதனால் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. ஆனால் இந்த பிரச்னையை அரசியலாக்க வேண்டாம் என குறிப்பிட்டுள்ளார்.
https://x.com/RKFI/status/1929402696072921158?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1929402696072921158%7Ctwgr%5E023064a5e6249e877595320b0965b1de35e9a424%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fm.test.in%2F
இதன் ஒரு பகுதியாக கர்நாடகா திரைப்பட வர்த்தக சபையின் உறுப்பினர்கள் அம்மாநில முதல்வர் சித்தராமையாவை சந்தித்து பேசியுள்ளனர். இந்த நிலையில் தக் லைஃப் விவகாரத்தில் சட்ட ரீதியாக ஒத்துழைப்பு தருவதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா உறுதியளிக்கிறார். கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் கமல்ஹாசன் வழக்கு தொடர்ந்திருக்கும் நிலையில் சித்தராமையாவின் ஆதரவு மேலும் சிக்கலை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. தான் இயக்குவதற்காக வைத்திருந்த அமர் ஹாய் என்ற கதையை கேட்ட மணிரத்னம் அதனை தனது ஸ்டைலில் திரைக்கதையை மாற்றி தக் லைஃப் படமாக உருவாக்கியிருப்பதாக கமல்ஹாசன் தெரிவித்திருந்தார். கமலின் அமர் ஹாய் படம் தான் தலைவன் இருக்கிறான் என்ற பெயரில் கமல்ஹாசன், வடிவேலு நடிப்பில் உருவாக இருந்ததாகவும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க விருந்ததாகவும் பேட்டிகளில் கமல்ஹாசன் குறிப்பிட்டிருக்கிறார்.