ஜெயராம்,சூர்யா, பூஜா ஹெக்டே, JoJu ஜார்ஜ் இன்னும் பல நட்சத்திரங்களின் நடிப்பில் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம்.
கதைப்படி வளர்ப்பு மகனான சூர்யாவுக்கு சிரிப்பு என்பது அறவே மறந்துவிட்டது. சிறு குழந்தையிலிருந்து அவரை JoJu சார்ஜ் தத்து எடுத்து வளர்க்கிறார். ஆனாலும் அவரின் அம்மா நினைவை பிரதிபலிப்பது போல் பூஜா ஹெக்டே ஒரு காட்சியில் வருவதால் இவர் தன் மனதை பறிகொடுத்து விடுகிறார். அன்றிலிருந்து பூஜாவுக்காக அனைத்து அடிதடி, கொலை சண்டை போன்ற அனைத்தையும் விட்டு விடுகிறேன் என்று சபதம் ஏற்று ஐந்து வருடத்தில் அனைத்தையும் விட்டு விடுகிறார். ஆனால் அன்றைய திருமணத்தின்போது திடீரென்று இவருக்கும் இவரது தந்தையான joju சார்ஜ்க்கும் ஒரு கைகலப்பு ஏற்படுகிறது இந்த கைகலப்புக்கு காரணம் என்ன என்பதும், இவர் இதிலிருந்து தப்பித்தாரா இல்லையா? பூஜா ஹெக்டே கல்யாணம் செய்து கொண்டாரா இல்லையா என்பதுதான் முழு கதையும்.
சூர்யாவின் நடிப்பு எப்படி இருக்கிறது என்று சொல்வதற்கு நமக்கு தகுதி இல்லை,படத்தின் முதல் காட்சியிலிருந்து இறுதி காட்சி வரைக்கும் சூர்யா அளப்பரிய ஆற்றலை முழுமையாக வெளிப்படுத்தியுள்ளார். பூஜா ஹெக்டேவின் நடிப்பு மிகவும் தத்துரூபமாக இருந்தாலும் ஜொலிக்கவில்லை என்பதுதான் உண்மை. ஜெயராமின் கதாபாத்திரத்தை வேஸ்ட் பண்ணி விட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும். இந்தப் படத்தில் JoJu ஜார்ஜ் மட்டும்தான் முழுமையாக என்ன நடிகர் என்று அறியப்படுகிறார்.
அதேபோல் படத்தின் முதல் பாதி திரைக்கதை மிகவும் சலிப்பை தட்டுகிறது. கதை எந்த கோணத்தை நோக்கி நகர்கிறது என்று புரியாமல் தவிக்க வைக்கிறது. ஆனால் இது கார்த்திக் சுப்புராஜ் படம் அல்லவா இரண்டாம் பாதியில் ஏதாவது ஒரு மேஜிக்கை செய்து சரிபடுத்தி விடுவார் என்று நம்பினால் ஒரு மேஜிக்கும் இல்லை ஒரு லாஜிக்கும் இல்லை படத்தை அப்படி எடுத்து வைத்திருக்கிறார்கள் இரண்டாம் பகுதி என்னதான் வேகமாக சென்றாலும் அதை பார்க்கும் பொழுது மனதில் ஒட்டவில்லை என்று சொல்வதுதான் நேர்த்தியான உண்மை.
இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணனின் இசை மிகப் பெரிய பலம். அதிலும் குறிப்பாக ஆங்கில படத்தில் மிகவும் பிரபலமான இசையமைப்பாளரான ஹான்ஸ் ஜிம்மரை ஞாபகப்படுத்தும் அளவில் ஒரு இசையை போட்டு இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். இவருக்கு கூடுதல் பலமாக இந்தப் படத்தை ஒளிப்பதிவு செய்த ஒளிப்பதிவாளருக்கும் பங்கு உண்டு.
இந்தப் படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் எப்பொழுதுமே தனக்கென ஒரு தனி பாணியை வைத்திருப்பார் அதாவது இடைவெளியின் முன்பு ஒரு மிகப்பெரிய ஒரு ட்விஸ்ட் வச்சிருப்பார். அதேபோல் படத்தின் இறுதிக்காட்சியில் ஒரு ட்விஸ்ட்வைத்திருப்பார் என்று நம் அனைவருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் இந்த படத்தின் இறுதி காட்சியில் வரும் ஒரு டூரிஸ்ட் படத்தையே கெடுத்து விடுகிறது என்று தான் சொல்ல வேண்டும்.
ஆக மொத்தத்தில் ரெட்ரோ படம் சூரிய ரசிகர்களுக்கான படம். பொது மக்களுக்கான படம் அல்ல என்பது தான் ஆணித்தரமான உண்மை.