தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளில், புதிய முயற்சிகளெடுத்து நடித்து முன்னணி நடிகராக கலக்கிவரும் நடிகர் விக்ரம். 
இவர் பா.ரஞ்சித் இயக்கும் "தங்கலான்" படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .
இப்படத்தில் மாளவிகா மோகனன், பார்வதி நாயர், பசுபதி போன்ற பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் விக்ரம் இப்படத்தின் ஷூட்டிங்கில் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் விக்ரம் படு மாஸான லுக்கில் இருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது என்றே சொல்லலாம்.



