கிரீடம், மதராசப்பட்டினம், தெய்வ திருமகள், தாண்டவம் உள்ளிட்ட பல படங்களை இயக்கி அனைவரையும் கவர்ந்த இயக்குனர் ஏ.எல்.விஜய் தற்போது அருண் விஜய் நடிக்கும் 'அச்சம் என்பது இல்லையே' என்ற படத்தை இயக்கி வருகிறார்.
இப்படத்தின் கதாநாயகியாக எமி ஜாக்சன் நடிக்க ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். அருண் விஜய்க்கு இப்படத்தின் படப்பிடிப்பின் போது காயம் ஏற்பட்டு அவர் சமீபத்தில் கேரளாவில் சிகிச்சை எடுத்து வந்தார் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம்.

தற்போது, நடிகர் அருண் விஜய் படப்பிடிப்பு தளத்தில் சமையல் செய்துள்ளார். அதாவது, 'அச்சம் என்பது இல்லையே' படப்பிடிப்பு தளத்தில் தனக்கான உணவை அருண் விஜய்யை சமைக்கும் வீடியோவை அவர் தனது இணையப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
மேலும், அந்த வீடியோவின் கமெண்ட்ஸுக்கு கீழ் பல நாட்களாக தள்ளி போகும் "பார்டர்" படத்தின் ரிலீஸ் எப்போது என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


