
movie reviewsBy sivan|2024-05-31
அக்காலி திரைவிமர்சனம்..!
பிளாக் மேஜிக் என்று சொல்லக்கூடிய மாந்திரீக உலகங்களில் நடக்கக்கூடிய கிரைம்களை பற்றி பேசும் படம்.
internel affairs போலீசாக வரும் ஸ்வயம் சித்தா, ஒன்பது வருடத்திற்கு முன் போலீஸ் இன்ஸ்பெக்டரான ஜெயக்குமார் எடுத்த அமானுஷ கேஸை பற்றி விசாரிக்கிறார்.
அதன் வழியாக அந்த கதை விரிவடைகிறது.
இந்த உலகில் தன்னம்பிக்கையின்மை, தோல்வி, மனவேதனை, இயலாமை ஆகிய பல காரணங்களால் சாவின் விளிம்பிற்கு சென்று உயிர் நீக்க முற்படுபவனை கடவுளின் எதிரியான சாத்தான் அரவணைத்துக் கொள்கிறார் என்றும், அதன் மூலமாக நிறைய நரபலிகள் நடைபெறுகின்றன என்றும் கூறி, இந்த கதை பல அமானுஷ்ய விஷயங்களில் செல்கிறது.
படத்தின் பட்ஜெட் மிகவும் சிறியது என்றாலும், கை தேர்ந்த ஒளிப்பதிவால் படத்தை ஆங்கில படத்திற்கு இணையாக காட்டியிருக்கிறார்கள் அற்புதம்.
படத்தை விறுவிறுப்பாக காட்ட வேண்டும் என்ற பெயரில், எடிட்டர் காட்சிகளை மாறி மாறி கத்தரித்து இருக்கிறார்.
ஆனாலும் படம் மனதில் ஒட்டவில்லை என்று தான் சொல்ல வேண்டும். காரணம் ஒரு படம் யாருக்காக எதற்காக எடுக்கிறோம் என்ற ஒரு கேள்வியை முன் வைக்கும்? இந்தப் படம் அந்த கேள்விக்கு பதில் சொல்ல தவறி இருக்கிறது.
மேலும் ஒரு திரைக்கதையில் விறுவிறுப்பை கூட்ட வேண்டும் என்பதற்காக, தேவையில்லாத சடங்குகளையும், சம்பிரதாயங்களும் தேவையில்லாத போதை கலாச்சாரங்களையும் புகுத்தி திணித்து இருக்கிறார்கள். இவை அனைத்தும் வேண்டுமென்றே செய்த அபத்தத்தின் உச்சமாகவே பார்க்கப்படுகிறது.
நல்ல கதைகளை தேர்ந்தெடுப்பதில் நாசர் கைதேர்ந்தவர், எப்படி இப்படி ஒரு கதையை தேர்ந்தெடுத்தார் என்று தான் தெரியவில்லை. நீண்ட நாட்களுக்கு பிறகு தலைவாசல் விஜய் தன்னுடைய தனிப்பட்ட நடிப்பை கொடுத்தாலும், அவருடைய பங்கு பெரிதாக இல்லை.
இந்த படத்தின் இயக்குனர் பிளாக் மேஜிக் அப்படிங்கற ஒரு விஷயத்தை ரொம்ப நம்பி இருக்கிறார், அதற்கான கதைகளுக்காக நிறைய மெனக்கெட்டு இருக்கிறார். ஆனால் அவை அனைத்தையும் பாமர மக்களுக்கு எளிதாக புரியும்படி படம் பிடித்து காட்ட வில்லை. இதுவே இப்படத்தின் தோழ்விக்கு மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது.
ஆக மொத்தத்தில் அக்காலி துர்நாற்றம் அடிக்காத தக்காளி
