
movie reviews ➔ kollywood newsBy sivan|2025-01-10
Game Changer திரை விமர்சனம்.
ராம்சரண், கியாரா அத்வானி, அஞ்சலி, சமுத்திரகனி இன்னும் பல நட்சத்திரங்களின் நடிப்பில் இசையமைப்பாளர் தமன் இசையில், பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம்.
பணம் இல்லாத அரசியல் என்பதுதான் படத்தின் கதை கரு. ஆனால் இந்தப் படத்திற்கு அளவுக்கு அதிகமான பணத்தையே செலவு செய்துள்ளனர். என்ன ஒரு முரண்பாடான விஷயம்?
ஐபிஎஸ் பதவியில் இருந்து மாறி ஐஏஎஸ் ஆக விசாகப்பட்டினம் மாவட்டத்திற்கு கலெக்டராக வரும் ராம்சரண் அங்கு சில அதிரடி மாற்றங்களை செய்கிறார். இன்னொரு பக்கம் காதலியை கரம் பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் அவர் வேலை செய்யும் இடத்திற்கு சென்று பார்க்கும்போது அஞ்சலியை சந்திக்க நேரிடுகிறது. இவை அனைத்தும் ஒன்று கூடி முதல்வரை மேடையில் அசிங்கப்படுத்தி விடுகிறார் அஞ்சலி. அந்த இடத்தில் எஸ்.ஜே சூர்யாவுக்கும் ராம்சரனுக்கும் ஒரு அடிதடி நடந்து விடுகிறது. இதிலிருந்து அரசியல்வாதியா? அரசாங்க அதிகாரியா? என்ற ஈகோ தான் படத்தின் முழு கதையும்.
சண்டைக் காட்சிகளில் கூட ராம்சரணின் மேக்கப் கலையவில்லை என்பதுதான் அபத்தம். அஞ்சலி இந்த படத்தின் மூலம் தேசிய விருது எனக்கு கிடைக்கும் என்று தன்னுடைய நம்பிக்கையை கூறியிருந்தார். அதற்கு வாய்ப்பில்லை ப்ரோ. எஸ் ஜே சூர்யா ஒரு நல்ல நடிகர். அவரை படம் முழுவதும் கத்தவிட்டு கதற விட்டு தெலுங்கு நடிகர் ஆக்கிவிட்டார் ஷங்கர்.
படத்தின் மிகப்பெரிய பலவீனம் திரைக்கதை. சங்கரின் படத்தில் எப்பொழுதுமே அழுத்தமான ஃப்ளாஷ் பேக் காட்சிகள் இருக்கும். இந்தப் படத்தில் ஏன் தான் இந்த பிளாஷ்பேக் வருகிறது என்று தோன்ற வைத்து விடுகிறது.
காட்சிக்கு காட்சி பிரம்மாண்டம் ஏற்படுத்துகிறேன் என்ற பெயரில் தேவையில்லாமல் நிறைய பொருட்செலவை செய்துள்ளார் ஷங்கர்.
தமன் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் படியாக இல்லை. பின்னணி இசையும் அழுத்தமாக இல்லை. சங்கர் சாருக்கு ஏ ஆர் ரகுமான் தான் ரைட் சைஸ் போல.
இந்தியன் 2 வில் வந்த எதிர்மறை விமர்சனத்தை முறியடிப்பார் ஷங்கர் என்ற எதிர்பார்ப்பில் படம் பார்க்கச் சென்றால் ஏமாற்றத்தையே கொடுத்துவிட்டார்.
முழுக்க முழுக்க தெலுங்கு ரசிகர்களை குஷி படுத்த வேண்டும் என்ற முனைப்பில் சங்கர் எடுத்துள்ள பக்கா கமர்சியல் படம். தமிழ் ரசிகர்களுக்கு சுத்தமாக இந்த படம் பிடிக்காது.
