தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான 'வாத்தி' திரைப்படம் கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி இதுவரை 60 கோடி வசூல் செய்து கலவையான விமர்சனத்தையே பெற்றது.
இதைத்தொடர்ந்து அருண் மாதீஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் 'கேப்டன் மில்லர்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். தனுஷ் 50-வது பட போஸ்டர் தனுஷின் 50-வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது.
மேலும், இந்த படத்தை தனுஷ் இயக்கவுள்ளதாகவும், விஷ்ணு விஷால், எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், தனுஷின் 50-வது படம் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவுள்ளதாக செய்தி பரவி வருகிறது.

