2022ம் ஆண்டில் பல படங்கள் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டு நம்மக்கு எம்மாற்றத்தையே கொடுத்தது. அந்த வகையில், அஜித் நடிப்பில் வெளியான "வலிமை", விஜய் நடிப்பில் வெளியான "பீஸ்ட்", சிவா கார்த்திகேயன் நடிப்பில் வெளியான "பிரின்ஸ்" என பல படங்கள் நம்மை ஏமாற்றியது.
தற்போது, இந்த ஆண்டு மக்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் 5 படங்களின் பட்டியலை பாப்போம்.
ஐந்தாவது இடத்தை பிடித்திருப்பது, தனுஷ் நடிப்பில், அருண் மாதீஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் "கேப்டன் மில்லர்" திரைப்படம் தான். இதற்கு முன் அருண் மாதீஸ்வரன் இயக்கிய, "சாணிகாயிதம்" மற்றும் "ராக்கி" திரைப்படங்களே இப்படத்தின் எதிர்பார்ப்புக்கு காரணம்.
நான்காம் இடத்தை பிடிப்பது, "துருவ நட்சத்திரம்" திரைப்படம். பல ஆண்டுகளாக கிடப்பில் இருக்கும் இப்படம் இந்த ஆண்டு வெளியாகும் என்று தகவல்கள் வந்துள்ளது.
மூன்றாவது இடத்தில் இருப்பது, ரஜினி, மோகன்லால், ஜாக்கி ஷேராப் நடிப்பில். நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் "ஜெயிலர்" திரைப்படம் தான்.
இரண்டாம் இடத்தில் விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் "LEO" திரைப்படம். சென்ற வாரம் வரை முதல் இடத்திலிருந்த இப்படம். எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத ஒரு ப்ரோமோவை வெளியிட்டதால் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
முதல் இடத்தில் இருப்பது, தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க வைத்த, வசூல் வேட்டையாடிய "பொன்னியின் செல்வன்-2" திரைப்படம் தான்.

