
tamil news ➔ tollywood news ➔ kollywood newsBy sivan|2025-03-18
வெளியானது அஜித்தின் முதல் சிங்கிளான OG சம்பவம்: ரசிகர்கள் மரண கொண்டாட்டம்!
நடிகர் அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் விடாமுயற்சி. கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் இந்த திரைப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய தோல்வியை அடைந்ததாக கூறுகின்றனர்.
அடுத்ததாக மாஸ் கம்பேக் கொடுக்கும் நோக்கத்தில் அஜித் குட் பேட் அக்லி படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி பலத்த வரவேற்பை பெற்று தமிழ் சினிமாவில் இதுவரை வெளியான டீசர்களில் 24 மணி நேரத்தில் அதிகம் பார்வையாளர்களை கடந்த சாதனையையும் படைத்திருந்தது.
https://youtu.be/kuZ-6jd82Go?si=RYElUohgt3-lb98W
இந்த படத்தின் மீது இந்திய சினிமா அளவுக்கு எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஏப்ரல் 10ம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தை புஷ்பா படங்களை தயாரித்த மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இனி வரும் நாட்களில் படத்தின் ப்ரோமோஷன் பணிகளை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக தான் இன்று படத்தின் முதல் பாடலான OG Sambavam பாடல் வெளியாகி இருக்கிறது.
ஏற்கனவே இந்தப் பாடலுக்கான ப்ரோமோ வெளியாகி இருந்த நிலையில் பாடல் மீதான எதிர்பார்ப்புகள் அதிகமாகவே இருந்தன . எனவே, பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பாடல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த பாடலை விஷ்ணு எடவன் எழுத இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்து பாடியிருக்கிறார். அவருடன் இணைந்து ஆதிக் ரவிசந்திரனும் பாடியிருப்பதாகத் தெரிகிறது. நடுநடுவே அஜித் பேசும் வசனங்களும் பாடலில் இடம்பெற்றுள்ளது. பாடலை கேட்டுவிட்டு ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் பாடல் நன்றாக இருக்கிறது. கதையுடன் நகரும் பாடலாக இருக்கும் என நினைக்கிறேன். எனவும், பாடலை விட பாடலில் அஜித் பேசும் வசனங்கள் தான் மாஸாக இருப்பதாக ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
