
movie reviewsBy sivan|2024-06-08
வெப்பன் திரை விமர்சனம்
ஒரு சாதாரண youtube நடத்தும் வசந்த் ரவி மற்றும் அவரது நண்பர்கள், அபார சக்திகள் கொண்ட சூப்பர் ஹியூமன் இருக்கிறார், அவரைச் சந்தித்து விட வேண்டும் என்று தேடிச் செல்கிறார்கள். அப்படி ஒரு மனிதன் இருக்கிறானா இல்லையா என்று ஒரு பக்கம் கதை போக, இன்னொரு பக்கம் ராஜீவ் மேனன் தலைமையில் சீக்ரெட் சொசைட்டி என்ற பெயரில் ஒரு பெரிய குழு இயற்கை வளங்கள் எல்லாம் சுரண்டுகிறது. அந்தக் குழுவில் உள்ள ஒவ்வொருவரையும் ஒருவன் கொலை செய்கிறான் அவன் ஒரு சூப்பர் ஹியூமன் என்று நம்பி இந்தக் குழுவும் சூப்பர் ஹியூமன் இருக்கிறானா என்று தேடிச் செல்கிறது. யார் அந்த சூப்பர் ஹியூமன்... கண்டுபிடித்தார்களா இல்லையா.. என்பதுதான் படத்தின் கதை.
தமிழ் சினிமாவில் புதிதாக முயற்சி செய்து இருக்கிறார்கள். பாராட்டுக்கள்.
ஆனால் படத்தின் திரைக்கதை கொஞ்சம் கூட ஒட்டவே இல்லை. நம்பும்படியாகவும் இல்லை. ஏகப்பட்ட நட்சத்திரக் கூட்டங்கள். ஆனால் வசந்த் ரவி மட்டுமே படம் முழுதும் தெரிகிறார். இவ்வளவு கதாபாத்திரங்களை தவிர்த்து இருக்கலாம்.
ஆங்கில பட பாணியில் எடுக்கிறேன் என்ற பெயரில், பல ஆங்கில படங்களின் கதைகளையே திணித்து எடுத்திருக்கிறார்கள்.
படத்தின் ஒளிப்பதிவு மிக அருமை. ஆனால் படம் முழுதும் கருப்பு கலரையே காட்டி இருப்பது என்ன கொடுமை.
ஒரு படத்தின் அடிநாதம் மக்களுக்கு கனெக்ட் ஆகும் வழியில் இருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால், அந்தப் படம், எவ்வளவு பெரிய நல்ல படமாக இருந்தாலும் மக்களிடம் சென்று சேராது.
அந்த வகையில் இந்த வெப்பன் படமும் மக்களிடம் சென்று சேருவது கடினம்.
