விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், ரமேஷ் திலக், அருள்தாஸ், கஜராஜ், மீனாக்ஷி தினேஷ், இன்னும் பல நட்சத்திரங்களின் நடிப்பில் சான் ரோல்டன் இசையில் சண்முகப்பிரியன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம். கதைப்படி விக்ரம் பிரபுவிற்கு 30 வயதிற்கு மேல் ஆகிறது. அவருக்கு உள்ளூரில் எந்த பெண்ணும் கிடைக்காததால், வேற ஊருக்கு வந்து பெண் பார்க்கிறார்கள். பார்த்த மாத்திரத்திலேயே நிச்சயதார்த்தமும் முடிந்து விடுகிறது. சரி ஊருக்கு கிளம்பலாம் என்று முடிவு பன்னி கிளம்பும் வேளையில், பஸ் மக்கர் பண்ணி ஒரு நாள் தங்கும்படியாக ஆகிவிடுகிறது. சரி பஸ் ரெடி செய்து அடுத்த நாள் கிளம்பலாம் என்று கிளம்பும்போது கொரோனா காரணமாக லாக்டவுன் போட்டு விடுகிறார்கள். தற்பொழுது மாப்பிள்ளை வீட்டாரும், பெண் வீட்டாரும் ஒரே வீட்டில் இருப்பதால் திருமணத்திற்கு முன்பாகவே நிறைய கூச்சல் குழப்பம், அமளி துமளி எல்லாம் நடைபெறுகிறது. இறுதியில் இதன் மூலம் விக்ரம் பிரபுவிற்கு திருமணம் நடந்ததா இல்லையா என்பதுதான் படத்தின் கதை. விக்ரம் பிரபுவிற்கு இவ்வளவு தான் நடிப்பு வருமா என்று கேட்கும் அளவிற்கு இந்த படத்தில் அவரின் நடிப்பு உள்ளது. கதாநாயகி சுஷ்மிதா பட் கண்ணால் மட்டுமே பேசுகிறார். படத்தில் அளவுக்கு அதிகமாக ரசிக்க வைப்பவர் அருள் தாஸ் மட்டுமே. மற்றபடி அனைத்து நட்சத்திரங்களும் பெரிதாக ஈர்க்கவில்லை. இது தெலுங்கு மொழியில் வெளியான விவாக போஜனம் படத்தின் உரிமையை வாங்கி தமிழில் ரீமேக் செய்து இருக்கிறார்கள். ஆனால் தெலுங்கில் இந்த படம் நொடிக்கு நொடி நிறைய நகைச்சுவை காட்சிகளை கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இந்தப் படத்தில் எந்த ஒரு நகைச்சுவை காட்சிகளும் ஈர்க்கும்படியாக இல்லவே இல்லை. பொதுவாகவே ஷான் ரோல்டன் இசை படத்திற்கு மிகப்பெரிய பலத்தை கொடுக்கும். ஆனால் இந்தப் படத்தில் அவரின் இசையில் எந்த ஒரு பலமும் கொடுக்கவில்லை. இசையும் மிக மிக சுமார் ரகம் தான். ஒளிப்பதிவும் பெரிதாக ஈர்க்கவில்லை. இந்தப் படத்தின் இயக்குனரான சண்முகப்பிரியன் இந்த கதையை ஏன் தேர்வு செய்தார் என்று தெரியவில்லை. இதற்கு விக்ரம் பிரபு எப்படி நடிக்க ஒத்துக் கொண்டார் என்றும் புரியவில்லை. ஏனெனில் இந்தப் படத்தில் எந்த ஒரு முகாந்திரமும் வசிக்கும் படியாக இல்லை. ஆக மொத்தத்தில் லவ் மேரேஜ் படம் எப்படி இருக்கிறது என்றால், அதை தமிழில் பார்ப்பதற்கு பதிலாக தெலுங்கில் ஒரு தடவை பார்த்து விடலாம்.