தனுஷ் நடிப்பது மட்டுமல்லாமல் இயக்குனர்,தயாரிப்பாளர்,பாடலாசிரியர் என பல அவதாரங்களை எடுத்து தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கிறார்.இவர் தற்போது தன்னுடைய இட்லிக்கடை திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார்.
இதற்கு முன்பாக ராயன் திரைப்படத்தை இயக்கி நடித்து ரசிகர்களிடையே பெரும் பாராட்டை பெற்றார்.இப்படத்தில் தனுஷ் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்தார்.
தற்போது இவருடைய இட்லி கடை படத்தின் ஷூட்டிங் பகுதியில் இருந்து புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை சந்தோசப்படுத்தியுள்ளது.தன்னுடைய முதல் படம் துள்ளுவதோ இளமை போல மீசை இல்லாமல் இளமையான தோற்றத்தில் இருப்பது போல் இருக்கிறார்.
https://x.com/CinemaWithAB/status/1862861932400701840?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1862861932400701840%7Ctwgr%5E18726ddf17b3148b2eae9a6334d5147dd884f5bc%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fapi-news.dailyhunt.in%2F
இப்படத்தில் தனுசுக்கு ஜோடியாக நித்யாமேனன் நடிக்கிறார்.ஜி.வி.பிரகாஷ்குமார் படத்திற்கு இசையமைக்கிறார்.இப்படம் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

