
movie reviewsBy sivan|2024-08-03
மழை பிடிக்காத மனிதன் திரைவிமர்சனம்
இயக்குனர் விஜய் மில்டன் இயக்கத்தில் சரத்குமார், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், விஜய் ஆண்டனி மேகா ஆகாஷ் நடித்திருக்கும் படம்.
தனது வாழ்க்கையில் அனைத்தையும் தொலைத்த விஜய் ஆண்டனி சரத்குமார் மூலமாக அந்தமானில் தஞ்சம் அடைகிறார்.
அங்கு அவர் சந்திக்கும் மனிதர்கள், அவர்களின் மூலமாக உருவாகும் பிரச்சினைகள், அவருக்குள் இருக்கும் காதல், எந்த ஒரு எமோஷனல் பிணைப்பும் இருக்கக் கூடாது என்ற நம்பிக்கையை எப்படி உடைக்கிறது என்பதுதான் இந்த படத்தின் கதை கரு.
Jhon wick ஸ்டைலில் ஒரு படத்தை கொடுக்க ஆசைப்பட்டிருக்கிறார் இயக்குனர்.
படத்தின் இயக்குனரான விஜய் மில்டன் அடிப்படையில் ஒரு ஒளிப்பதிவாளர் என்பதால் இந்த படத்தின் ஒவ்வொரு காட்சி அமைப்பும் மிகவும் தத்ரூபமாக உள்ளன. அதில் ஓர் அழகியலும் உள்ளது.
சரண்யா பொன் வண்ணன் மிகவும் வித்தியாசமான தோற்றத்தில் நடித்திருக்கிறார்.
மேகா ஆகாஷ் தேவதையாக வந்து செல்கிறார்.
படத்தில் சில காட்சிகள் நமக்கு ஆங்காங்கே புரியாமல் செல்கின்றன. ஆனால் கதையோ விறுவிறுப்பாகவே செல்கின்றன.
இருந்தாலும் படத்தின் திரைக்கதையில் கூடுதலாக கவனம் செலுத்தி இருக்கலாம்.
இயக்குனர் விஜய் மில்டன், பத்திரிக்கையாளர் காட்சியின் போது அவர் இந்த படத்தை பார்க்கும் போது படத்தின் முதலில் வரும் அந்த இரண்டு நிமிட கிராபிக்ஸ் காட்சிகள், அவர் எடுத்ததல்ல என்றும், எனக்கே அது மிகவும் ஷாக்காக இருக்கிறது என்றும் கூறி இருந்தார். அந்த காட்சிகளை தவிர்த்து விட்டு படத்தை பாருங்கள் படம் நன்றாக இருக்கும் என்றும் கூறியிருந்தார். படம் ஓரளவுக்கு சுமாராகவே உள்ளது.
ஆனால் ஒரு படத்தின் இயக்குனரான விஜய் மில்டனக் கூட கலந்தாலோசிக்காமல் படக்குழுவினர் இப்படி ஒரு சம்பவம் செய்திருப்பது, ஏற்புடையதா என்பதுதான் கேள்விக்குறி..?
ஒரு படைப்பாளனின் படைப்புக்கு அங்கீகாரம் கொடுக்கப்படாமல் இருக்கும் பட்சத்தில் அந்தப் படத்தின் தோல்விக்கு அந்த படைப்பாளியே காரணம் என்று கூறுவதும் நியாயம் அல்ல..!
ஆக மொத்தத்தில் மழை பிடிக்காத மனிதன் படம் ஓடவில்லை என்றால் அதற்கு முழுக்க முழுக்க இயக்குனர் விஜய் மில்டன் பொறுப்பாக மாட்டார் என்பதுதான் உண்மை.
ஆக மொத்தத்தில் மழை பிடிக்காத மனிதன் ஒரு தடவை பார்க்கக்கூடிய சுமாரான படம்.
