அறிமுக இயக்குநர் சரீஷ் இயக்கி, நாயகனாகவும் நடித்துள்ள "மதர்" திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் தமிழகத்திலும், உலகளாவிய அளவிலும் திரையரங்குகளில் வெளியாகிறது. நவீன கால தம்பதிகளின் உறவை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில், சரீஷுடன் அர்திகா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், தேசிய விருது பெற்ற நடிகர் தம்பி ராமையா புதுமையான கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். வின்செண்ட் செல்வா திரைக்கதை எழுதிய இப்படத்திற்கு ரூபன் கதை, வசனம் வழங்கியுள்ளார். ரேஷ்மா தயாரிப்பில் RESAR Enterprises நிறுவனத்தின் சார்பாக படம் உருவாகியுள்ளது. கொடைக்கானலில் படப்பிடிப்பு முழுமையாக நிறைவு பெற்றுள்ளது. படத்திற்கு ஆர். தேவராஜன் இசையமைக்க, வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்ய, சாம் லோகேஷ் எடிட்டிங் பணியை செய்துள்ளார். படத்தின் வெளியீட்டு தேதி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.