
tamil news ➔ bollywood news ➔ tollywood news ➔ kollywood newsBy sivan|2024-08-13
மகாராஜா பட இயக்குனரின் அடுத்த படத்தில் மகாராணியாக நயன்தாரா..!
விஜய்சேதுபதி நடித்த மகாராஜா திரைப்படம் ஜூன் 14 ஆம் தேதி தியேட்டரில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று 100 கோடிக்கு மேல் வசூலை அள்ளியது. இப்படத்தில் அனுராக் காஷ்யப் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும், நட்டி, சிங்கம் புலி, மம்தா மோகன்தாஸ், அபிராமி, முனிஷ்காந்த், வினோத் சாகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு அஜ்னீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார்.
இப்படத்திற்கு மக்கள் மத்தியில் இருந்து நல்ல விமர்சனம் வந்ததை அடுத்து, தியேட்டருக்கு ரசிகர்கள் படையெடுத்தனர். அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்த இத்திரைப்படம், உலகம் முழுவதும் படம் ரூ.100 கோடியை வசூலித்தது. வழக்கமாக எந்த நடிகர்களுக்கும் 50வது படம் சிறப்பாக அமையாத நிலையில், விஜய் சேதுபதிக்கு இப்படம் ஒரு கம்பேக் கொடுக்கும் படமாக அமைந்தது. இத்திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ஹீரோவா சினிமாவில் மாஸ் காட்ட தொடங்கி உள்ளார் நடிகர் விஜய் சேதுபதி. தற்போது மகாராஜா திரைப்படம், நெட்ப்ளிக்ஸ் தளத்தில் தமிழ் தவிர, தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகி மக்கள் அதிகம் பார்த்த பட வரிசையில் 5வது இடத்தில் உள்ளது
இந்நிலையில், மகாராஜா படத்தை தொடர்ந்து, நிதிலன் சுவாமிநாதன் இயக்கும் படத்தில் நயன்தாரா முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் இந்த படத்திற்கு 'மகாராணி' என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 'மகாராஜா' படத்தை தயாரித்த பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் மீண்டும் நிதிலனுடன் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
