ஜெயம் ரவி - நித்யா மேனன் நடித்து ரெமாண்டிக் படமாக உருவாகியிருக்கும் காதலிக்க நேரமில்லை பொங்கல் ரிலீசாக ஜனவரி 14ஆம் தேதி திரைக்கு வருகிறது.
இந்த படத்தின் ட்ரெயலர் வெளியீட்டு நிகழ்வு சமீபத்தில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர்கள் அனைவரும் பங்கேற்ற நிலையில், இசையமைப்பாளர் அனிருத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் அனிருத் பேசும்போது, "சோஷியல் மீடியாக்களில், ஆன்லைனில் எல்லோரும் சொல்வார்கள் அடுத்து இவர்தான் என்பார்கள். ஆனால் நான் முன்னாடியே சொன்னது தான். தலைவன் தலைவன் தான், தொண்டன் தொண்டன் தான், லவ் யூ சார்" என ஏ.ஆர். ரஹ்மான் வாழ்த்தி பேசியுள்ளார். அனிருத் பேசிய விடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதற்கு பதில் அளித்து பேசிய ஏ.ஆர். ரஹ்மான், "அப்போது மொத்தம் 10 இசையமைப்பாளர்கள் இருப்பார்கள், தற்போது 10 ஆயிரம் இசையமைப்பாளர்கள் உள்ளனர். அதற்கு இடையில் நிலைத்து நிற்கிறார்.
திறமை இல்லாமல் அது முடியாது. அதையெல்லாம் செய்துவிட்டு இங்கே வந்து மிக பணிவாக தலைவன் தலைவன் தான், தொண்டன் தொண்டன் தான் என்று கூறுகிறார். அதற்கு தனி மனது வேண்டும்" என்றார்.
இதைக் கேட்ட அவரின் ரசிகர்கள், " பெரிய மனுஷன்.. பெரிய மனுஷன் தான்" என்று ஏ ஆர் ரகுமானை புகழ்ந்து தள்ளுகிறார்கள்.

