

tamil news ➔ bollywood news ➔ tollywood news ➔ kollywood news ➔ sandalwood newsBy sivan|2024-06-19
பிரபுதேவா ஏ ஆர் ரகுமான் கூட்டணியில் உருவாகும் படத்திற்கு 'Moon Walk' என்று பெயரிடப்பட்டுள்ளது
25 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபுதேவா - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி மீண்டும் இணைந்துள்ள திரைப்படத்தின் தலைப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் நடிகர் பிரபுதேவா இருவரும் 25 ஆண்டுகளுக்கு பிறகு புதிய திரைப்படத்தில் இணைந்துள்ளனர். Behindwoods நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்தை மனோஜ் என்.எஸ். இயக்குகிறார். இந்த திரைப்படத்தில் யோகி பாபு, அஜு வர்கிஸ், அர்ஜூன் அசோகன், ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன், சிங்கம்புலி, லொல்லுசபா சாமிநாதன், குக்வித்கோமாளி தீபா உள்ளிட்டோர் முக்கிய கதாபத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
இந்த திரைப்படம் ஏ.ஆர்.ரகுமான் - பிரபு தேவா இணையும் 6-வது திரைப்படமாகும். முதன்முறையாக ஏ.ஆர்.ரகுமான் - பிரபு தேவா 1994-ம் ஆண்டு 'காதலன்' திரைப்படத்தின் மூலம் இணைந்தார்கள். ஷங்கர் இயக்கிய இந்தப் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதைத் தொடர்ந்து லவ் பேர்ட்ஸ், மிஸ்டர் ரோமியோ, மின்சார கனவு ஆகிய திரைப்படங்களும் வெற்றி பெற்றது. தற்போது 25 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.
https://twitter.com/behindwoods/status/1803314610822586814?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1803314610822586814%7Ctwgr%5E73f731b3afd027725b7a04385e1a6a5db5c864d1%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fapi-news.dailyhunt.in%2F
இந்த திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்துள்ளதாக படக்குழு கேக் வெட்டி கொண்டாடியது. இந்நிலையில் இப்படத்தின் தலைப்பை வெளியிட்டுள்ளது படக்குழு. அதன்படி, இப்படத்திற்கு, 'மூன்வாக்' என பெயரிடப்பட்டுள்ளது. மைக்கேல் ஜாக்சனின் மிகப்பிரபலமான நடனமுறையின் பெயரை படத்தின் பெயராக வைத்துள்ளதால், இப்படமும் நடனத்தை மையமாக கொண்டிருக்கலாம் என ரசிகர்கள் தெரிவித்துவருகின்றனர்.


