ஆந்திரப் பிரதேசத்தின் துணை முதல்வர் பவன் கல்யாண் நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளார். ஆந்திரப் பிரதேசத்தின் துணை முதல்வராக கடந்த 2024-ம் ஆண்டு பதவியேற்றுக்கொண்ட நடிகர் பவன் கல்யாண், தனது அரசு அலுவல்கள் காரணமாக படப்பிடிப்புகளுக்கு நீண்ட விடுமுறை அளித்திருந்தார். இந்நிலையில், தற்போது மீண்டும் ஹைதரபாத்தில் நடைபெறும் படப்பிடிப்பில் அவர் ஈடுபட்டுள்ளதாக அவரது புதிய படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இயக்குநர் சுஜீத் இயக்கத்தில் 'தே கால் ஹிம் ஓஜி' (எ) 'ஓஜி' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் புதிய திரைப்படத்தில் பாலிவுட் நடிகர் இம்ரான் ஹாஷ்மி வில்லனாக நடிக்கின்றார்.