
tamil news ➔ kollywood newsBy sivan|2024-12-18
நான் விடுதலை 2 ப்ரோமோஷன்க்காக வந்திருக்கிறேன்: விஜய் சேதுபதி காட்டம்!
இயக்குனர் வெற்றி மாறன் இயக்கியத்தில் விடுதலை 2 படம் உருவாகி உள்ளது. இதில் பிரகாஷ்ராஜ், சேத்தன், மூணார் ரமேஷ் போன்ற பலரும் நடித்துள்ளனர்.
இப்படம் வருகிற 20ம் தேதி வெளியாக உள்ளது என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்நிலையில் இந்த படத்தின் புரோமோஷனுக்காக படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தெலுங்கு யூடியூப் சேனல் நேர்காணல் ஒன்றில் விஜய் சேதுபதி கலந்து கொண்டார். அப்போது அவரிடம், சமீபத்தில் தமிழ் சினிமாவில் பெரிய நடிகர்களின் படம் சரியாக ஓடவில்லை என்றும், சூர்யாவின் கங்குவா திரைப்படம் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை என்றும் கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த அவர், நான் இங்கு விடுதலை 2 படத்தின் புரோமோஷனுக்காக வந்திருக்கிறேன். சம்பந்தமில்லாமல் இந்த கேள்வி எல்லாம் ஏன் கேட்கிறீர்கள், யாரும் தோல்வியடைய வேண்டுமென்று படங்கள் எடுப்பதில்லை. தோல்வி என்பது எல்லாருக்கும் வரும், நானும் ஒரு ஆண்டுகள் எந்த ஒரு ஹிட்டும் கொடுக்காமல் இருந்தேன். ஒரு படம் வெளியாவதற்கு முன்பு பலரிடமும் போட்டு காட்டி அவர்களின் விமர்சனத்தை கேட்டு சரி செய்த பிறகு தான் திரைக்கு கொண்டுவரப்படுகிறது. இருப்பினும் படம் வெற்றி பெறுவது மக்கள் கையில் தான் இருக்கிறது. படம் தோல்வி அடைந்தால் அதிலிருந்து கற்றுக் கொண்டு தவறுகளை சரி செய்ய வேண்டும். வெற்றி, தோல்வி யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம் என்று அவர் கூறியிருந்தார்.
