
tamil news ➔ kollywood newsBy sivan|2025-06-26
நடிகையாக போகும் தேவயானி மகள்: யார் படத்தில் தெரியுமா?
சினிமாவில் நடிகர் நடிகைகளின் மகன்கள் அல்லது மகள்கள் நடிக்க வருவது ஒன்றும் புதிது அல்ல. வாரிசு அரசியலை போலவே வாரிசு சினிமாவும் இருந்து வருகிறது.
ஆனால் திறமையான வாரிசுகள் மட்டுமே ஜெயிக்க முடியும் என்பது சினிமாவில் கட்டாயமாக இருக்கிறது. பல நடிகர் நடிகைகளின் வாரிசுகள் சில படங்களிலேயே காணாமல் போயிருக்கின்றனர்.
தமிழ் சினிமாவில் மிக நல்ல சிறந்த நடிகையாக பெயர் வாங்கியவர் தேவயானி. கடந்த 1990களில் ஹோம்லியான கேரக்டர்கள் என்றாலே முதலில் இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் கால்ஷீட் கிடைக்குமா என்று கேட்பது நடிகை தேவயானியை தான். கவர்ச்சி காட்டாமல் சிறந்த நடிப்பை மட்டுமே வெளிப்படுத்தி தனது திறமையை மட்டுமே நம்பி ஜெயித்தவர் தேவயானி என்பதும் குறிப்பிடத்தக்கது.
நீ வருவாய் என, விண்ணுக்கும் மண்ணுக்கும் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் ராஜகுமாரனை நடிகை தேவயானி காதல் திருமணம் செய்துக்கொண்டார். இந்த நட்சத்திர தம்பதிக்கு இனியா, பிரியங்கா என 2 மகள்கள் உள்ளனர். தேவயானியின் தம்பி நகுல் ஏற்கனவே நடிகராக இருக்கிறார். பாய்ஸ் படத்தில் அறிமுகமான அவர் பல படங்களில் நடித்திருக்கிறார்.
இந்நிலையில் தேவயானி மகள்களில் ஒருவர் விரைவில் கதாநாயகியாக ஒரு படத்தில் அறிமுகமாகிறார். இந்த படத்தை நடிகர் மற்றும் தயாரிப்பாளர் தியாகராஜன்தான் டைரக்ட் செய்கிறார். நடிகர் பிரசாந்தின் அப்பாவான இவர் கடந்த 1980 90களில் பல படங்களில் ஹீரோவாக நடித்தவர். சில படங்களில் வில்லனாகவும் நடித்திருக்கிறார்.
நடிகர் பிரசாந்த் ரீ என்ட்ரி கொடுத்த அந்தகன் படத்தை தயாரித்து இயக்கியவர் நடிகர் தியாகராஜன் தான். இப்போது ஒரு புதிய படத்தை இயக்க உள்ளார். தெலுங்கில் கோர்ட் என்ற படம் மாஸ் ஹிட் ஆன நிலையில், அந்த படத்தை தமிழில் ரீ மேக் செய்து தியாகராஜன் இயக்குகிறார். இந்த படத்தில் சாய்குமார் நடித்த லாயர் கேரக்டரில் தியாகராஜன் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இப்போது இந்த படத்தில் நாயகன் யார் என்பதும் இன்னும் முடிவாகவில்லை. பிரசாந்த் நடிக்க வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது. ஆனால் இந்த படத்தில் நாயகியாக தேவயானி மகள்தான் நடிக்கிறார் என்பது உறுதியாகி விட்டது. அம்மா நடிகை அப்பா இயக்குனர் மாமா நடிகர் என்ற நிலையில் கலை குடும்பத்தில் இருந்து அடுத்த வாரிசாக தேவயானி மகளும் தமிழ் சினிமாவில் காலடி பதிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
