

tamil news ➔ bollywood news ➔ tollywood news ➔ kollywood news ➔ sandalwood newsBy sivan|2024-10-04
நடிகர் ரஜினிகாந்த் நலம் பெற வேண்டும் -இளையராஜா வாழ்த்து
நடிகர் ரஜினிகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் 30-ம் தேதி கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரது இதயத்தில் இருந்து செல்லும் முக்கிய ரத்த நாளம் வீங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அவருக்கு அறுவைசிகிச்சை அல்லாத டிரான்ஸ்கேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டது.
தற்போது ரஜினிகாந்த் ஐசியூவில் இருந்து தனி வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் ரஜினிகாந்த் இன்று வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் நாளை (அக்.4) டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இசைஞானி இளையராஜா வெளியிட்டுள்ள பதிவில் "மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் எனது உயிர் நண்பன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நாளை வீடு திரும்புவார் என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன்.அவர் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும்.வெல்கம், வெல்கம்…” என பதிவிட்டுள்ளார்.


