
tamil news ➔ bollywood news ➔ tollywood news ➔ kollywood news ➔ sandalwood newsBy sivan|2024-08-07
த்ரிஷா இல்லைனா நயன்தாரா படம் எடுத்தவருடன் இணையும் த்ரிஷா.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ், கயல் ஆனந்தி நடித்த 'த்ரிஷா இல்லனா நயன்தாரா' திரைப்படம் வெளியாகி இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் தொடர்ந்து பட வாய்ப்புகள் சிம்பு, பிரபுதேவா, விஷால் மற்றும் அஜித் குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை இயக்கும் வாய்ப்பும் கிடைத்தது.
விஷால், எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்து மிகப்பெரிய வெற்றி படமாக மாறிய நிலையில், அஜித் குமார் நடிக்கும் குட் பேட் அக்லி படத்தை இயக்கும் வாய்ப்பு ஆதிக் ரவிச்சந்திரனுக்கு கிடைத்தது.
புஷ்பா படத்தை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் குட் பேட் அக்லி படத்தின் ஹீரோயின் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.
மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தில் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடித்து வரும் நிலையில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் 'குட் பேட் அக்லி' படத்திலும் த்ரிஷா அஜித்துக்கு ஜோடியாக நடிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
'த்ரிஷா இல்லனா நயன்தாரா' படம் எடுத்த ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்திலேயே த்ரிஷா நடிக்கப் போகிறாரா என சினிமா வட்டாரத்தில் பரவலான பேச்சுகள் அடிபட்டு வருகின்றன.
ஸ்ரீலீலா இருக்காரா?: குட் பேட் அக்லி படத்தில் முன்னதாக டோலிவுட் நடிகை ஸ்ரீலீலா நடிக்கப் போவதாக தகவல்கள் வெளிவந்த நிலையில், தற்போது த்ரிஷாவின் பெயர் அடிபட்டு வருகிறது. இந்நிலையில், ஸ்ரீலீலா அந்த படத்தில் இருக்காரா? அல்லது 2 ஹீரோயின்களா? என்பது குறித்த அப்டேட்கள் சீக்கிரம் வெளியாகும் எதிர்பார்க்கப்படுகிறது.
