சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த்தின் 171-வது படமாக கூலி உருவாகிறது.

இப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.

படத்தின் படப்பிடிப்பு சென்னை விமான நிலையத்தில் அண்மையில் நடைபெற்றது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் துவங்குகிறது.

இந்த நிலையில், இப்படத்தில் இடம்பெற்ற குத்து பாடல் ஒன்றிற்கு நடிகை பூஜா ஹெக்டே சிறப்பு நடனமாடியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் ஏற்கனவே விஜய்யின் ஜனநாயகன் படத்திலும் நடித்து வருகிறார்.

ஜெயிலர் படத்தில் நடிகை தமன்னா ஆடிய, 'காவாலா' பாடல் பெரிய ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.