
tamil news ➔ bollywood news ➔ tollywood news ➔ kollywood news ➔ sandalwood newsBy sivan|2024-09-18
கூலி படத்தின் ஒரு காட்சி கசிந்தது : லோகேஷ் கனகராஜ் வருத்தம்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் கூலி திரைப்படத்தின் படப்பிடிப்புக் காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளன.
இதன் காரணமாக லோகேஷ் கனகராஜ் உள்பட ஒட்டுமொத்த படக்குழுவினரும் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
இதையடுத்து, சற்று முன் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைதளப் பதிவில் அன்பான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது, ஒரேயொரு விடியோ பதிவு மூலம் ஏராளமான மக்களின் கடந்த இரு மாத கால கடின உழைப்பு வீணாகிவிட்டது.
https://x.com/Dir_Lokesh/status/1836407846491083214?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1836407846491083214%7Ctwgr%5Eb0c801b1911eac868b781d1dfbcc7afec971e393%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fapi-news.dailyhunt.in%2F
இவ்வாறு படக்காட்சிகள் வெளியிடப்பட்டால், ஒட்டுமொத்த படத்தின் சுவாரசியத்தையும் கெடுத்து விடும். ஆகவே, இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாமென ஒவ்வொருவரையும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி! எனப் பதிவிட்டுள்ளார்.
