
tamil news ➔ kollywood newsBy sivan|2025-01-22
ஒரே ஒரு படம் தோல்வி! சிறுத்தை சிவாவிற்கு வந்த நிலைமை இப்படியா?
சிறுத்தை படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் சிவா. இந்த படத்தின் அபார வெற்றிக்கு பிறகு சிறுத்தை சிவா என்றே அழைக்கப்படுகிறார். நடிகர் அஜீத்குமார் நடித்த வீரம் விவேகம் விஸ்வாசம் வேதாளம் உள்ளிட்ட படங்களை இயக்கினார்.
இந்த படங்கள் அனைத்துமே மாபெரும் வெற்றிப் படங்களாக அமைந்து சிறுத்தை சிவாவுக்கு நல்ல பெயரை சம்பாதித்துக் கொடுத்தது. விஸ்வாசம் படம் பார்த்து அசந்து போன ரஜினிகாந்த், தனது அண்ணாத்த படத்தை இயக்கும் வாய்ப்பை சிறுத்தை சிவாவுக்கு அளித்தார். ஆனால் பெரிய அளவில் அண்ணாத்த படம் ஹிட் ஆகவில்லை.
இந்த சூழலில்தான், நடிகர் சூர்யா நடித்த கங்குவா படத்தை சிறுத்தை சிவா இயக்கினார். 2000 கோடி ரூபாய் வசூலை கடக்கும், படம் நெருப்பு மாதிரி இருக்கும் என்றெல்லாம் பில்டப் செய்யப்பட்ட இந்த படம் கடந்தாண்டு நவம்பர் மாதம் 14ம் தேதி வெளியானது. கங்குவா படத்தை ரசிகர்கள் சகட்டு மேனிக்கு திட்டி தீர்த்தனர்.
இப்படி ஒரு மோசமான படம் தமிழ் சினிமாவில் இதுவரை வந்ததே இல்லை. படம் முழுக்க கத்திக்கொண்டே இருப்பதால் படத்துக்கு கங்குவா என்பதற்கு பதிலாக கத்துவா என பெயரிட்டு இருக்கலாம் என்றனர். ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்த இந்தியன் 2 படம் மிக மோசமான விமர்சனங்களை சந்தித்து படுதோல்வி அடைந்தது. ஆனால் கங்குவா படம் வெளியான பிறகு, இந்தியன் 2 படம் கூட ஒருமுறை பார்க்கலாம், ஆனால் கங்குவா படத்தை அரைமணி நேரம் கூட பார்க்க முடியாது என்றும் கலாய்த்தனர்.
இந்த சூழலில் கங்குவா படம் தோல்விக்கு பிறகு எந்த தயாரிப்பாளரும் தனக்கு வாய்ப்பு தரவில்லை. தயாரிப்பாளரே யாரும் எனக்கு படம் தர முன்வர மறுக்கிறார்கள் என தனது நெருங்கிய நண்பர்களிடம் மிகவும் வருத்தப்பட்டு பேசியிருக்கிறார் சிறுத்தை சிவா. இவரது இந்த நிலைமைக்கு உதவ, அஜீத்குமாரும் இல்லாமல் துபாய் கார் பந்தயத்தில் பிஸியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
