தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நாகார்ஜுனா. இவர் தமிழிலும் பல படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது நடிகர் தனுஷ் நடிக்கும் குபேரா படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நடிகர் தனுஷ், அவருடைய மகன் மற்றும் நடிகர் நாகார்ஜுனா ஆகியோர் ஏர்போர்ட் சென்றனர். அப்போது வயதான ரசிகர் ஒருவர் நடிகர் நாகார்ஜுனாவை சந்திக்க வந்தார். அவரை பாதுகாவலர் ஒருவர் வயதானவர் கூட என்று பாராமல் கீழே தள்ளிவிட்டார். இதை சற்றும் கண்டுகொள்ளாமல் நடிகர் நாகார்ஜுனா மற்றும் தனுஷ் ஆகியோர் அங்கிருந்து சென்றனர். இது தொடர்பான வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் நடிகர் நாகார்ஜுனா தனுஷின் செயலுக்கு ரசிகர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். https://twitter.com/viralbhayani77/status/1804893182326685722?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1804893182326685722%7Ctwgr%5Eaf1506d8ca49da138100f3e74462377f78baf720%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fapi-news.dailyhunt.in%2F