
tamil news ➔ kollywood newsBy sivan|2025-05-25
வைரலாகும் Immortal படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோஸ்!
தமிழில் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து (Ashwath Marimuthu) இயக்கத்தில் இறுதியாக வெளியான படம் டிராகன் (Dragon).
அந்த படத்தில் நடிகர் பிரதீப் ரங்கநாதன் முன்னணி நாயகனாக நடித்திருந்தார். மக்கள் மத்தியில் இந்த படமானது பெரும் வெற்றிபெற்றது. இந்த படத்தில் பல்லவி என்ற ரோலில் நடித்து ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தவர் நடிகை கயாடு லோஹர் (Kayadu Lohar). இவரின் நடிப்பில் STR 49( STR49), இதயம் முரளி (Idhayam Murali) என அடுத்தடுத்த படங்களில் முன்னணி நாயகியாக நடித்து வருகிறார்.
இந்த படத்தைத் தொடர்ந்து , இவர் நடிகர் ஜி.வி. பிரகாஷ் (G.V. Prakash) உடன் நடித்தது வரும் படம்தான் இம்மார்ட்டல் (Immortal). இந்த படத்தினை அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா (Mariyappan Chinna) இயக்கி வருகிறார்.
இந்த படத்தில் கயாடு லோஹர் ஜிவி பிரகாஷ் ஜோடியாக நடித்து வருகின்றனர். இந்த படத்தின் முதல் பார்வை கடந்த 2025, மே மாதம் 9ம் தேதியில் வெளியாகியது. இந்த படமானது ரோமன்ஸ், நகைச்சுவை மற்றும் த்ரில்லர் கதைக்களத்துடன் உருவாகி வருவதாகக் கூறப்படுகிறது. இந்த படத்தின் முதல் பார்வை வெளியாகி இணையத்தில் பெரும் வைரலான நிலையில், அதை தொடர்ந்து இந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படமும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இது தொடர்பான புகைப்படத்தை நடிகர் ஜிவி பிரகாஷ் குமார் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
https://x.com/gvprakash/status/1925796270326620463?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1925796270326620463%7Ctwgr%5E81295f9c42ed3a5274e8d42ead0013cc1117801b%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fm.test.in%2Fed3a5274e8d42ead0013cc1117801b%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fm.test.in%2F
