‘ஜடா’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் குமரன் இயக்கத்தில், காதல் மற்றும் மனித உறவுகளின் உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள புதிய இசைப் படைப்பு ‘இருவர்’. ஸ்டோன்புரூக் பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்பாடலுக்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளார். சூரஜ் சந்தோஷ் மற்றும் அதிதி ஷங்கர் இணைந்து பாடியுள்ளனர். மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பாடல் வரிகளை எழுதியிருப்பது இப்பாடலின் முக்கிய சிறப்பாக அமைந்துள்ளது.

காதல், நட்பு, உறவுகள் என மனித உணர்வுகளை வார்த்தைகளைக் கடந்து இசையின் வழியாக வெளிப்படுத்தும் வகையில் ‘இருவர்’ உருவாகியுள்ளது. வழக்கமான திரைப்படக் கதை சொல்லும் முறையிலிருந்து மாறுபட்டு, இசை, பாடல் வரிகள், காட்சியமைப்பு மற்றும் கலைஞர்களின் வெளிப்பாடுகள் மூலம் உணர்வுகளைக் கடத்தும் புதிய முயற்சியாக இப்படைப்பு அமைந்துள்ளது.

‘ஜடா’ படத்திற்குப் பிறகு இயக்குநர் குமரன் மேற்கொண்டுள்ள இந்தப் புதிய முயற்சி, அவரது படைப்புப் பயணத்தில் வித்தியாசமான அணுகுமுறையாக அமைந்துள்ளது. கால்பந்தாட்டப் பின்னணியில் உருவான ‘ஜடா’ திரைப்படத்தைத் தொடர்ந்து, தற்போது காதல் மற்றும் மனித உறவுகளை இசையின் வழியாகச் சொல்லும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

‘தெகிடி’, ‘சேதுபதி’, ‘ஓ மை கடவுளே’ உள்ளிட்ட படங்களுக்கு இனிமையான பாடல்களைக் கொடுத்த இசையமைப்பாளர் நிவாஸ் கே. பிரசன்னா, ‘இருவர்’ இசைப் படைப்புக்கு இசையமைத்துள்ளார். இவருடன் சூரஜ் சந்தோஷ் மற்றும் அதிதி ஷங்கர் இணைந்து பாடியுள்ளனர். நடிகையாக மட்டுமின்றி பாடகியாகவும் கவனம் பெற்றுவரும் அதிதி ஷங்கரின் குரலும், சூரஜ் சந்தோஷின் உணர்வுப்பூர்வமான குரலும் இப்பாடலுக்கு கூடுதல் சிறப்பு சேர்த்துள்ளன.

இப்படைப்பின் மற்றொரு முக்கிய அம்சமாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பாடல் வரிகளை எழுதியுள்ளார். தனது இயல்பான நடிப்பாலும், வித்தியாசமான கதாபாத்திரத் தேர்வுகளாலும் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுவரும் விஜய் சேதுபதி, தற்போது பாடலாசிரியராகவும் தனது படைப்புப் பங்களிப்பை வழங்கியுள்ளார். அவரது வரிகள் இப்பாடலின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.

ஸ்டோன்புரூக் பிலிம்ஸ் சார்பில் வினோத் குமார், புஷ்பகலா மற்றும் குமரன் இணைந்து தயாரித்துள்ள இப்பாடலுக்கு அர்ஜுன் ராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பை தீபக் மேற்கொண்டுள்ளார். கலை இயக்குநராக ஜெய் முருகன் பணியாற்றியுள்ளார். கூடுதல் கீபோர்டு மற்றும் ரிதம் புரொடக்‌ஷன், கூடுதல் மாஸ்டரிங் பணிகளை ஹெவின் பூஸ்டர் கவனித்துள்ளார்.

நிஷாந்த் நடன இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். புவனா மற்றும் தீபிகா ஆடை வடிவமைப்புப் பணிகளையும், நவநீத கிருஷ்ணன் விளம்பர வடிவமைப்பையும் கவனித்துள்ளனர். முரளி புகைப்படப் பணிகளை மேற்கொண்டுள்ளார். தயாரிப்பு மேலாளராக கோகுலும், தயாரிப்பு ஒருங்கிணைப்பாளர்களாக நவீன், பிரவீன் மற்றும் கோபிநாத் திரவியமும் பணியாற்றியுள்ளனர். வண்ணச் சேர்க்கைப் பணிகளை சண்முகபாண்டியன் மேற்கொண்டுள்ளார். மக்கள் தொடர்புப் பணிகளை ரேகா கவனிக்கிறார்.

ஸ்டோன்புரூக் பிலிம்ஸ் தயாரிப்பில், ‘ஜடா’ புகழ் குமரன் இயக்கியுள்ள ‘இருவர்’ இசைப் படைப்பின் ஆடியோ மற்றும் லிரிக்கல் வீடியோ நவம்பர் 4, 2026 அன்று சரிகமா ஒரிஜினல்ஸ் (Saregama Originals) வெளியீடாக வெளியாகிறது.