சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘தர்மன்’ திரைப்படத்தில் நடிகை ஸ்ரீலீலா இணைந்துள்ளார். ஏற்கனவே முன்னணி கலைஞர்களின் கூட்டணியில் உருவாகி வரும் இப்படத்தில் ஸ்ரீலீலாவின் வருகை படத்தின் நட்சத்திரப் பட்டியலை மேலும் வலுப்படுத்தியுள்ளதுடன், ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.

அஸ்வத் மாரிமுத்து இயக்கும் இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். அதிரடியான சண்டைக் காட்சிகளை அன்பறிவ் சகோதரர்கள் வடிவமைக்கின்றனர். திறமையான கலைஞர்களின் கூட்டணி, புதுமையான கதை சொல்லல் மற்றும் பிரம்மாண்டமான தொழில்நுட்ப உருவாக்கம் என அனைத்து அம்சங்களிலும் ரசிகர்களுக்கு சிறப்பான திரையரங்க அனுபவத்தை வழங்கும் வகையில் ‘தர்மன்’ உருவாகி வருகிறது.

ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா நிறுவனங்கள் சார்பில் கமல்ஹாசன் மற்றும் ஆர். மகேந்திரன் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். ஒவ்வொரு அறிவிப்பின் மூலமும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து வரும் ‘தர்மன்’ படக்குழு, தற்போது நடிகை ஸ்ரீலீலாவையும் தனது நட்சத்திரக் கூட்டணியில் இணைத்துள்ளது.