தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என அடுத்தடுத்துஹிட் படங்களை கொடுத்தவர்.

இன்றைய தலைமுறையினரின் பேவரைட் இயக்குநரான இவர் G Squad என்ற தயரிப்பு நிறுவனத்தை தொடங்கி, அறிமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்து வருகிறார்.
லோகேஷ் கங்காராஜின் முதல் தயாரிப்பில் வெளியான "Fight Club' படம் வெளிவந்து கலவையான விமர்சனத்தை பெற்றது. தற்போது பென்ஸ் என்ற 2வது படத்தை தயாரித்து வருகிறார் லோகேஷ் கனகராஜ்.

பாக்கியராஜ் கண்ணன் இயக்கும் பென்ஸ் படத்தில் பிரபல சண்டிகர் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார். மேலும் படத்தின் கதை லோகேஷ் கனகராஜுடையதாம், ஆகையால் ராகவா லாரன்ஸ் நடிக்கும் 'பென்ஸ்' திரைப்படமும் லோகேஷ் கனகராஜின் LCUவில் தான் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பென்ஸ் படத்தில் ராகவா லாரன்சுக்கு ஜோடியாக பிரபல நடிகை பிரியங்கா மோகனன் நடிக்கவுள்ளார் என்ற புது தகவல் தற்போது வெளியாகியுள்ளது.


