கடந்த சில வருடங்களாகவே விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா காதல் குறித்த தகவல் டோலிவுட் வட்டாரத்தில் அதிகம் பேசுபொருளாகி உள்ளது. இதுவரை இருவருமே காதல் குறித்து வாய் திறக்கவில்லை என்றாலும், பல சமயங்களில் ஒன்றாக வெளியே செல்லும் போது கேமரா கண்களில் சிக்கி கிசுகிசுவுக்கு ஆளாகி வருகிறார்கள்.
சமீபத்தில் கூட ரஷ்மிகா மந்தனா விஜய் தேவரகொண்டாவின் குடும்பத்தினருடன் புஷ்பா 2 படத்தை கண்டுகளித்தனர். விஜய் தேவரகொண்டா குடும்பத்தினருடன் திரையரங்கை விட்டு இவர் வெளியே வந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரலானது.
அதே போல் சென்னையில் நடந்த, புஷ்பா 2 படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியிலும்... நீங்கள் திருமணம் செய்து கொள்ள உள்ளவர் ஒரு நடிகரா? என தொகுப்பாளர் கேட்டதற்கு இது எல்லாருக்குமே தெரிந்தது தான் என கூறி, விஜய் தேவரகொண்டா உடனான காதலை மறைமுகமாக வெளிப்படுத்தினார். விஜய் தேவரகொண்டாவும், நடிகை ஒருவருடன் டேட்டிங் செய்து வருவதை செய்தியாளர்கள் முன் ஒப்புக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
விஜய் தேவரகொண்டா 37 வயதை நெருங்கி வருவதால், கூடிய விரைவில் இருவரும் தங்களுடைய காதலை வெளிப்படையாக அறிவித்து திருமண வாழ்க்கையில் இணைவார்கள் என ரசிகர்கள் எதிர்பார்க்கும் நிலையில், இப்போதைக்கு அதற்க்கு வாய்ப்புகள் குறைவு என்றே தெலுங்கு மீடியாக்களில் செய்திகள் வலம் வந்துகொண்டிருக்கிறது.


