
tamil news ➔ bollywood news ➔ tollywood news ➔ kollywood news ➔ sandalwood newsBy sivan|2024-06-25
முதல் நாளிலேயே 200 கோடி ரூபாயை வசூலிக்குமா கல்கி..?
பாகுபலி படத்தின் மூலம் ஒட்டுமொத்த இந்திய திரையுலகின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்த பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'கல்கி 2898ஏடி'.
இப்படத்தில் பிரபாஸுடன் கமல்ஹாசனும், அமிதாப் பச்சனும் இணைந்து நடித்துள்ளதால், ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
நாக் அஸ்வின் இயக்கியுள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். உலகம் முழுவதும் ஜூன் 27-ஆம் தேதி 'கல்கி 2898 ஏடி' பிரம்மாண்டமாக வெளியாகிறது.
முதல் நாளிலேயே உலகம் முழுவதும் 200 கோடி ரூபாய் வசூல் செய்ய வேண்டுமென்று படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
