ஶ்ரீ ஆர்ச் மீடியா சார்பில் சக்கரா மற்றும் ராஜ் தயாரிப்பில் எம் சரவணன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் நாடு.  மலைவாழ் மக்களின் வாழ்வையும் அவர்கள் அடிப்படைத் தேவைகளுக்கும் கூட எப்படிப்பட்ட சிரமங்களை அனுபவிக்கிறார்கள் என்ற எதார்த்தத்தையும் மிக அழகாக சொல்லி இருக்கிறதாம் இப்படம். இதில் கதாநாயகனாக பிக் பாஸ் புகழ் தர்ஷன் நடிக்க, கதாநாயகியாக மகிமா நம்பியார் நடித்துள்ளார்.  இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் சிங்கம் புலி, RS சிவாஜி மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படம் முழுக்க முழுக்க கொல்லிமலை பகுதியில் படமாக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு சத்யா இசையமைக்க, சக்தி ஒளிப்பதிவு செய்ய, PK படத்தொகுப்பினை கவனிக்கிறார். எம்.சரவணன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி 'நாடு' திரைப்படத்தினை இயக்கியிருக்கிறார்.